Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 டிசம்பர், 2021

ஆன்லைனில் உணவு ஆர்டர்.. ரூ. 89,000 வங்கிக் கணக்கில் அபேஸ்.. என்ன நடந்தது தெரியுமா? உஷார் மக்களே.!

ஆன்லைனில் விஷயம் தெரியாமல் பழிகேடாவாகும் மக்கள்

தொழில்நுட்ப உலகம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய விஷயமாக மாறி உள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தி, அவர்களின் வசதியை அதிகரித்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சி சில நேரங்களில் சிக்கலையும் நம் மக்களுக்கு வழங்குகிறது. அதிலும், குறிப்பாக ஆன்லைன் மூலம் நிகழும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளன. இந்த குறைபாடுகள் காரணமாக மக்கள் சில சிக்கலைச் சந்திக்க நேரிடுகிறது.

ஆன்லைனில் விஷயம் தெரியாமல் பழிகடாவாகும் மக்கள்

தொழில்நுட்பக் கோளாறுகள் அடிக்கடி தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு சில மக்கள் பழிகேடாவாகிறார்கள். குறிப்பாக இவர்கள் மோசடி கும்பல்களிடம் சிக்கும் போது பாதிப்பு இன்னும் அதிகமாகிறது. இணையத்தில் பொருட்கள் வாங்குவது, ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, போன் மூலம் வாகனம் புக்கிங் செய்வது, டிக்கெட் புக்கிங் செய்வது என்பது போன்ற பெரும்பாலான சேவைகள் எல்லாம் இப்போது ஆன்லைன் மயமாகிவிட்டது.

ஆன்லைனில் அதிகரிக்கும் மோசடி

இதை மக்கள் இப்போது இயல்பாகச் செய்யத் துவங்கிவிட்டனர். இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் சில சிக்கல்களில் சிக்கி சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இப்படி, சமீபத்தில் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு வினோதமான மோசடி நடந்தேறியுள்ளது. இவர் ஆன்லைன் இல் உணவு ஆர்டர் செய்ய முயன்ற போது அவரின் உணவுக்கான தொகையுடன் சேர்த்து, அவர் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ. 89,000 வரை பணத்தை இழந்துள்ளார்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த சோகம்

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, அந்த நபர் நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நபர் ஔரங்காபாத் நகரின் நரேகான் பகுதியில் வசிக்கும் பாபாசாஹேப் தாமஸ் ஆவர். இவர் சமீபத்தில் அவரின் சமூக ஊடக பக்கத்தில் ஒரு சலுகை விபரத்தைப் பார்த்திருக்கிறார். அதில், சில குறிப்பிட்ட உணவுக்குத் தள்ளுபடி வழங்கும் விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இந்த சம்பவம் உண்மையில் செப்டம்பர் மாதம் நடந்ததாக அறிக்கை மேலும் கூறியது.

மக்களின் ஆசையைத் தூண்டும் தள்ளுபடி பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து

தாமஸ் பார்த்த விளம்பரத்தின் படி, குறிப்பிட்ட ஹோட்டலில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை வாங்கும் போது ஆர்டர் செய்யப்படும் உணவு வகை ஒன்றுக்கு மேல் இரண்டு வேளை உணவு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள தகவல் மக்களை ஈர்க்கும் விதத்தில் இருந்துள்ளது. எப்போதும், மக்களின் ஆசையைத் தூண்டும் தள்ளுபடியின் பின்னணியில் எதோ ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் கிடைத்த லிங்க்.. கிரெடிட் கார்டு விவரம்.. பணம் அபேஸ்

ஒரு உணவு வகைக்கு அதே கட்டணத்தில் கூடுதலாக இரண்டு வகை உணவு இலவசமாகக் கிடைக்கிறது என்றதும் தாமஸ் உணவை ஆர்டர் செய்து, மோசக்காரர்களின் அந்த வலைக்குள் சிக்கிவிட்டார். ஆன்லைனில் கிடைத்த லிங்கை பயன்படுத்தி தாமஸ் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்திருக்கிறார். பின்னர், அந்த நபர் தனது கிரெடிட் கார்டு விவரங்களை இணையதளத்தின் பேமெண்ட் டேப் இல் பகிர்ந்து கொண்டு, உணவுக்கான கட்டணத்தைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. கட்டணத்திற்குப் பிறகு உணவு ஆர்டர் உறுதியாகியுள்ளது.

உணவு கட்டணத்தை தொடர்ந்து ரூ. 89,000 எப்படி திருடப்பட்டது?

ஆனால், அதற்குப் பின்னர் தான் தாமஸிற்கு ஆபத்து வந்துள்ளது. உணவு ஆர்டர் செய்த சில மணி நேரத்தில் தாமஸின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ. 89,000 வரை அவரின் அனுமதியே இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்ஸின் வங்கி கணக்கில் இருந்து பணம் திடீரென கழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாமஸ் பதட்டம் அடைந்துள்ளார். உடனடியாக விளம்பரத்தில் உள்ள உணவகத்தைத் தொடர்பு கொண்ட போது, அந்த தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

மோசடி குறித்து வழக்கு பதிவு

பிறகு தான் உண்மையில் மோசடி செய்யப்பட்டிருப்பதை உணர்ந்த தாமஸ், அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இப்போது விசாரணை நடந்து வருகிறது. தாமஸ் அளித்த புகாரின் அடிப்படையில், எம்ஐடிசி காவல் நிலையத்தில் ஐபிசியின் பிரிவு 420 (ஏமாற்றுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் செவ்வாய்க்கிழமை குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மோசடியில் இருந்து தப்பிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்?

டிஜிட்டல் மோசடியைக் கண்காணிப்பது மிகவும் கடினம் என்பதால், ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உன்னிப்பாக அந்த இணையதள விபரங்களைக் கவனிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தப் போகும் இணையதளம் அல்லது ஆப்ஸ் உங்கள் வங்கி விபரம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்கும் போது, ​கூடுதல் கவனம் செலுத்துங்கள். பணப் பரிவர்த்தனைக்கு முன்பு ​அது நூறு சதவிகிதம் உண்மையான போர்டல் என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த தவறை எப்போதும் செய்யாதீர்கள்

அது மோசடி வலை இல்லை என்பதை உணர்ந்த பின் உங்கள் கட்டணத்தைச் செலுத்துங்கள். ஒரு இணையதளத்தின் உண்மையான தன்மையைக் கண்டுபிடிப்பதும், அது போலியானதா என்பதைக் கண்டறிவதும் எளிதல்ல என்றாலும் கூட, மக்கள் புதிய இணையதளங்கள் மாற்றும் ஆப்ஸைப் பயன்படுத்தும் போது எப்போதும் சந்தேகத்துடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும். உங்கள் கிரெடிட் மட்டும் டெபிட் கார்டு விவரங்களை யாருக்கும் தெரியப்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது. குறிப்பாக CVV எண்ணை ஒருபோதும் வெளிப்படுத்த வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக