Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 டிசம்பர், 2021

இனி கூகுள் பே மூலம் சபரிமலை கோயிலில் காணிக்கை செலுத்த முடியும்.!

சபரிமலையில் ஐயப்ப பக்கதர்கள்

கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக தூரத்தில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு எளிமையாக பணம் அனுப்ப இந்த செயலிகள் மிக அருமையாக பயன்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் தற்போது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன்செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் இணைய வழி சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக இது தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது என்னவென்றால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த சன்னிதானம், நிலக்கல், ஆகிய இடங்களில் QR code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதுவும் சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 QR code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பக்தர்கள் 9495999919 என்ற எண் மூலம் google pay வழியாக காணிக்கை செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சேவையை தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது QR Code பலகைகளும், தொடர்பு எண் பற்றிய பலகைகளும் கோயிலின் உள்ளே சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலக்கல் உட்பட 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் நாட்களில் இந்த பலகைகள சபரிமலைக்கு செல்லும் பாதைகளிலும் பல்வேறு இடங்களில் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த இணைய வழி காணிக்கை வசதி பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற செயலிகள் அனைத்து இடங்களில் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன்,டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது இதுபோன்ற செயலிகள். குறிப்பாக பேடிஎம், போன் பே,கூகுள் பே போன்ற  செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. முன்புமொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்று பிடித்த டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டிய நிலைமை இருந்தது, ஆனால் இப்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்குகின்றன இந்த அசத்தலான செயலிகள். மேலும் இதுபோன்ற செயலிகள்  பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக