Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 3 டிசம்பர், 2021

'இனி பெட்ரோலை கேனில் நிரப்பி பரிசளிக்க வேண்டாம்' அமேசான் கிஃப்ட் வவுச்சர் போல இனி இதனையும் வவுச்சராக வழங்கலாம்

'இனி பெட்ரோலை கேனில் நிரப்பி பரிசளிக்க வேண்டாம்' அமேசான் கிஃப்ட் வவுச்சர் போல இனி இதனையும் வவுச்சராக வழங்கலாம்...

"கேன்ல எல்லாம் எதுக்குங்க வாங்கிட்டு போய் கொடுக்கறீங்க. இனி அமேசான் கிஃப்ட் வவுச்சர் போல எரிபொருளையும் வவுச்சராக கொடுங்க". ஒன்4யு (One4U) எனும் சூப்பரான திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப் லிமிடெட் (Indian Oil Corp Ltd) நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. சர்ச்சையை எழுப்பும் வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை இவற்றின் விலை பெற்று வருகின்றன. இதனைக் கண்டிக்கும் பல்வேறு விதமான போராட்டங்கள் நாட்டில் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

ஏன், நாட்டின் சில பகுதிகளில் மிக விலையுயர்ந்த பொருட்களுக்கு இணையாக பெட்ரோலை பாவித்து ஒரு சிலர் அதனை பரிசு பொருளாகவும் வழங்கி வருகின்றனர். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் இதனை கேனில் பிடித்து சென்று பரிசளித்த நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்களுக்கு ஏன் இந்தமாதிரியான சிரமம், இனி உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கிஃப்ட் வவுச்சராகவே எரிபொருளுக்கான கூப்பனை வழங்கலாம் என கூறுவதைப் போல் இந்தியன் ஆயில் கார்ப் லிமிடெட் (Indian Oil Corp Ltd) நிறுவனம் ஓர் தரமான சம்பவத்தை செய்திருக்கின்றது.

பெட்ரோல், டீசலை அன்பளிப்பாக வழங்க நினைப்போர்களுக்கு உதவும் வகையில் நிறுவனம் கிஃப்ட் வவுச்சர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூப்பரான திட்டத்தின் வாயிலாக அமேசான் கிஃப்ட் வவுச்சரைப் போல இனி எரிபொருளுக்கான வவுச்சர்களையும் கிஃப்டாக வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமாங்க, இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த கிஃப்ட் வவுச்சர் திட்டத்தை நாட்டில் சில தினங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. 'ஒன்4யு' (One4U) என்ற பெயரில் இந்த திட்டத்தை ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. நாட்டின் முதன்மையான ஆயில் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப் லிமிடெட் இதனை அறிமுகப்படுத்தியிருப்பது, விநோதமான பொருட்களை கிஃப்ட்டாக வழங்குவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலை தளம் அல்லது ஒன்4யு ஈசி ஃப்யூவல் தளத்தின் வாயிலாக நம்முடைய தேவைக்கேற்ப கிஃப்ட் வவுச்சரை வாங்கிக் கொள்ள முடியும். ரூ. 500 முதல் ரூ. 10,000 தேவைக்கேற்ப மதிப்பில் கிஃப்ட் வவுச்சரைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த வவுச்சர்களின் வாயிலாக இந்தியாவின் எந்த மூலையிலும் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும். ஒன்4யு கிஃப்ட் வவுச்சர் திட்டத்தின் அறிமுகத்தை முன்னிட்டு ரூ. 500க்கு மேற்பட்ட வாங்குதலுக்கு 0.75 சதவீதம் வரை இந்தியன் ஆயில் தள்ளுபடி வழங்க இருக்கின்றது. இந்த சலுகை மிகக் குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே.

கிஃப்ட் வவுச்சரை இ-மெயில் மற்றும் செல்போன் குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்ப முடியும் என்பது ஒன்4யு ஈசி ஃப்யூவல் தளத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. அத்தளத்தில் வவுச்சரைப் பெறுவோரின் தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பெறுவோருக்கான தகவல் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன.

இத்துடன், கிஃப்ட் வவுச்சரின் தகவல்கள் பெறுவோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்கிற தகவலும் அந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. கிஃப்ட் வவுச்சர் விவகாரத்தில் முறைகேடு ஏதும் நடைபெற்று விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நிபந்தனைகளை நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, ஓடிபி வாயிலாக பரிவார்த்தனையை அங்கீகரிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆகையால், நம்முடைய வவுச்சரை வேறு யாராலும் பயன்படுத்திவிட என தெரிகின்றது. நமது இந்திய அரசாங்கம் அண்மைக் காலங்களாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை லேசாகக் கட்டுப்படுத்தும் விதமாக அண்மையில் பெட்ரோலின் விலையில் ஒரு லிட்டருக்கு ரூ. 5ம், டீசலின் விலையில் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 10ம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக