Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 டிசம்பர், 2021

நாம் நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? சிரிப்போ சிரிப்பு... ரிலாக்ஸ் ப்ளீஸ்....!!

 ---------------------------------------------------
மொக்கை ஜோக்ஸ்...!!
----------------------------------------------------

ஆசிரியர் : ஏன்டா நேத்து வரல?
மாணவன் : தாத்தா செத்துட்டாரு சார்...
ஆசிரியர் : அப்புறம் எதுக்குடா? பாட்டி செத்துட்டாங்கன்னு லீவ் லெட்டர்ல எழுதி இருக்க...
மாணவன் : தாத்தா செத்துப்போன அதிர்ச்சில மாத்தி எழுதிட்டேன் சார்...
ஆசிரியர் : 😟😟
---------------------------------------------------
ராமு : அவ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல... போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?
சோமு : ப‌ல் ஆடுது‌ன்னு... இ‌ந்த டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட சொ‌ன்னது‌க்கு, பரதநா‌ட்டியமா? கு‌ச்சு‌ப்புடியா‌ன்னு? கே‌க்குறா‌ரு...
ராமு : 😩😩
---------------------------------------------------
புத்திசாலி மனைவி...!!
---------------------------------------------------
ஓர் அம்மா டாக்டரைத் 🙆 தேடி வந்தாங்க...

டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு👨 திடீர்-ன்னு அகோரப்பசி🍜 ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப்🍲 போடுறேன்... எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு, கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும்😩 எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சிட்டார்... என்னான்னு 🙋 பாருங்களேன்...

சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?💁

ஒரு வாரமா இப்படி இருக்கு!🙆

இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க?🙇 ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே?🙅

வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!😜😎

---------------------------------------------------
குறளும்.. பொருளும்..!!
---------------------------------------------------
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

விளக்கம்:

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்க வேண்டும். அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.
---------------------------------------------------
கொஞ்சம் சிரிச்சுத்தான் பாருங்களேன்...!!!
---------------------------------------------------
ஒரு பையன் கையில ஸ்கேலோட சாப்பிடுறான் ஏன்?
ஏன்னா... அவன் அளவோட சாப்பிடுறானாம்... 😝😝

உட்கார முடியாத தரை எது?
புளியோ 'தரை". 😦😦

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்...
அப்போ திரும்பாதீங்க... 😜😜

நாம் நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும். 😎😎

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக