Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 15 டிசம்பர், 2021

வரலாற்று சாதனை: சூரிய வளிமண்டலத்துக்குள் நுழைந்த நாசா: சூரியனின் கொரோனாவை தொட்டாச்சு- அடுத்து என்ன?


வரலாற்று சாதனை

நாசாவால் தொடங்கப்பட்ட மிகவும் லட்சியப் பணிகளில் ஒன்று பார்க்கர் சோலார் ப்ரோப் (the parker solar probe) ஆகும். சூரியனின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த முதல் விண்கலமாக இது மாறி இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த விண்கலம் கொரோனாவுக்கு நுழைந்தது என்றே சொல்லலாம். பூமியின் வளிமண்டல பகுதியை ஸ்ட்ராடோஸ்பியர், ட்ரோபோஸ்பியர், ஓசோன் என்று அழைக்கிறோமோ அதேபோல் சூரியனின் வளிமண்டல வெளிப்பகுதியை கொரோனா என்று அழைக்கப்படுகிறது.

வரலாற்று சாதனை

இந்த வரலாற்று சாதனை ஆனது ஏப்ரல் மாதத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாசா மூலம் தி பார்க்கர் சோலார் ப்ரோப் 2018-ல் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. தி பார்க்கர் சோலார் ப்ரோப் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே சூரியனின் வளிமண்டலத்தை தொட்டது என்றாலும் இந்த தரவுகளின் பகுப்பாய்வு ஆனது தற்போதுதான் நாசாவிடம் கிடைத்து உறுதிப்படுத்தியுள்ளது.

தீவிர வெப்பம் மற்றும் கதிர்வீச்சு

சூரிய ஆய்வு மேற்கொள்ளும் போது தீவிர வெப்பம் மற்றும் கதிர்வீச்சை தாங்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. தி பார்க்கலர் சோலார் ப்ரோப் ஆனது 4.5 இன்ச் தடிமன் கொண்ட கார்பன் காம்போசைட் ஷீல்ட் மூலம் பாதுகாக்கப்படுகிறது. ஷீல்ட் வெளிப்புறம் 1377 டிகிரி செல்ஸியஸ் வரை தாங்கக் கூடியது. இந்த ஷீல்ட் ஆனது சூரியனில் இருந்து வரும் வெப்பக்காற்றை தடுத்து விண்கலத்தை பாதுகாக்க உதவுகிறது. சூரியன் உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவியலாளர்கள் நன்கு புரிந்து கொள்ள இது அனுமதிக்கிறது.

தி பார்க்கர் சோலார் ப்ரோப்

ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று தி பார்க்கர் சோலார் ப்ரோப் ஆல்ஃப்வென் எல்லையை கடந்தது. இருப்பினும் இந்த தரவுத் தகவல் தற்போதே நாசாவிடம் கிடைத்துள்ளது. அதில் கொரோனாவின் வெளிப்புற விளம்பில் சூரியனின் ஈர்ப்பு மற்றும் காந்த சக்திகளால் சூரியப் பொருள் வெடித்து விண்வெளியில் பெருமளவு பயணிக்கிறது என தரவுகள் ஆய்வு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சூரியனின் வெளிப்புற வளிமண்டல பகுதியை நாசா தொட்டிருக்கிறது என்றால் சூரியனின் 3.8 மில்லியன் தொலைவில் தி பார்க்கர் சோலார் ப்ரோப் பயணித்திருக்கிறது.

கொரோனாவை ஆழமாக கவனிக்கும்

தற்போது தி பார்க்கர் சோலார் ப்ரோப்-ன் வெற்றியின் மூலம் அறிவியல் குழு கொரோனாவை ஆழமாக கவனிக்கும் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறது. அதேபோல் பிபிசி அறிக்கைப்படி இது 2025 ஆம் ஆண்டில் போட்டோஸ்பியர் அதாவது சூரியனின் மேற்பரப்புக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளது. இது சூரியனின் 7 மில்லியன் கிலோ மீட்டருக்குள் உள்ள தொலைவாகும்.

விளக்கப்படாத சில முக்கிய செயல்முறைகள்

தற்போதுவரை விளக்கப்படாத சில முக்கிய செயல்முறைகள் கொரோனாவில் நடைபெறுவதால், ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகுந்த ஆர்வத்தை தருகிறது. நாசா எதிர்பார்த்ததை விட சூரியனின் கொரோனா பகுதி அதிக கருப்பு நிறத்திலும், புழுதி நிறைந்ததாகவும் இருந்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் விஷயத்தில் ஒன்று, சூரியனின் போட்டோஸ்பியரில் உள்ள வெப்ப நிலை, இது கொரோனாவில் 6000 டிகிரி செல்சியஸாக இருந்தாலும் அதற்குள் ஒரு மில்லியன் டிகிரி வரை வெப்பம் உயரலாம் என கருத்ப்படுகிறது. மின்னூட்டப்பட்ட துகள்கள் ஓட்டம் இங்குதான் துரிதப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் கொரோனாவை மனிதர்கள் அறிவது என்பது சற்று இன்றியமையாத காரியமாகும்.

50000 கிமீ வேகத்தில் நகர்கிறது

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தி பார்க்கர் சோலார் ப்ரோப் 50000 கிமீ வேகத்தில் நகர்கிறது. இது இதுவரை மட்டும் மூன்று முறை சூரியனின் கொரோனா பகுதிக்குள் நுழைந்து திரும்பி விட்டது. கொரோனா பகுதிக்குள் நுழைந்த போது கடுமையான புழுதி படிந்து இருந்தாலும் தி பார்க்கர் சோலார் ப்ரோப் பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரோப் 50000 கிமீ வேகத்தில் பயணிப்பதால் வெப்ப சேதத்தை தடுக்க வேகமாக உள்ளே நுழைந்து வெளிய வர முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக