
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த சாதனத்தின் விலைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடல் ஆனது ரூ.23,190-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடல் ஆனது 10.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 2000 x 1200 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான சாதனம்.
அதேபோல்
இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடல் 4ஜிபி/3ஜிபி ரேம் மற்றும்
128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடலின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதேபோல் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடலில் 7040 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடலில் மிகவும் எதிர்பார்த்த Unisoc T618 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்;குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 2021 மாடல் வெளிவரும். அதேபோல் இளஞ்சிவப்பு, தங்கம், சாம்பல் மற்றும் வெள்ளி நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம்செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக