
ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், சமீபத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இரண்டும் இணைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இது ஜீ எண்டர்டெய்ன்மெண்ட நிறுவனத்தின் ரசிகர் பட்டாளத்தையும் பெரும் அதிரச்சிக்குள்ளாக்கியது. எனினும் இரு பெரும் பொழுதுபோக்கு நிறுவனங்களும் இணைக்கப்படும்போது, அதன் சேவையை இன்னும் விரிவுபடுத்த முடியும்.
ஏற்கனவே இந்திய சந்தையில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக இருந்து வரும் நிலையில், சோனி இந்தியா - ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் இணைப்பு இந்தியத் தொலைக்காட்சி பொழுதுபோக்குச் சந்தையில், மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. இதன் மூலம் சக போட்டியாளர்களை விஞ்சலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்புஇது குறித்து ஜீஎண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனித் கோயங்கா, இந்த இணைப்பு உறுதிபடுத்தியுள்ள நிலையில், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள், டிஜிட்டல் சொத்துகள், உற்பத்தி சொத்துக்கள், நிகழ்ச்சிகள் இணைப்பு குறித்தான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் ஜீ இணையத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
முக்கிய மைல்கல்
மேலும் இந்த இரு ஊடகங்களின் இணைப்பு என்பது மீடியா துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். மாபெரும் வாய்ப்புகளை கொண்ட இந்த பொழுதுபோக்கு துறையில் அடுத்த சகாப்தத்தினை நோக்கி ஒரு வெற்றி பயணத்திற்காக இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.
முன்னதாக இந்த இரு நிறுவனங்கள் இணைப்பு மூலம் இக்கூட்டணி நிறுவனத்தில் 75 டிவி சேனல்கள், 2 வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் (ZEE5 and Sony LIV), இரண்டு திரைப்பட ஸ்டூடியோ (Zee Studios and Sony Pictures Films India), மற்றும் ஒரு டிஜிட்டல் கண்டென்ட் ஸ்டூடியோ (Studio NXT) ஆகியவற்றுடன் ஸ்டார் & டிஸ்னி இந்தியா-வை விடவும் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில் இந்த இணைப்புக்கு பிறகு, இந்தக் கூட்டணி நிறுவனத்தின் தலைவராகப் புனித் கோங்கா தொடர்ந்து நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் சோனி பிக்சர்ஸ் தலைவரான என்பி சிங்-ன் நிலை என்ன என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஜீ - சோனி இணைப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அதன் பங்கு விலையானது பெரிய மாற்றம் காணவில்லை. தற்போது என் எஸ் இ-ல் சற்று அதிகரித்து 348.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 359.65 ரூபாயாகவும், குறைந்தபட்ச விலை இதுவரையில் 332.70 ரூபாயாகவும் உள்ளது.
இதே இதன் 52 வார உச்ச விலை 378.70 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலையாக 166.80 ரூபாயாகவும் உள்ளது. இதே பிஎஸ்இ-ல் இதன் பங்கு விலை சற்று குறைந்து, 348.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக