Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 டிசம்பர், 2021

P&G: உஷார்.. கேன்சர் ஆபத்துள்ள ஷாம்பு, ஹேர் ஸ்பிரே.. 30 பொருட்களை திரும்ப பெறும் பிரபல நிறுவனம்!

 பென்சீன் (Benzene)

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் P&G எனப்படும் Procter & Gamble நிறுவனத்தின் ஏரோசல் ட்ரை கண்டிஷனர் ஸ்ப்ரே மற்றும் ஏரோசல் ட்ரை ஷாம்பு ஸ்பிரே பொருட்களில் பென்சீன் என்ற நச்சு பொருள் இருப்பதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டு சுமார் 30 பொருட்களைத் திரும்பப் பெற உள்ளதாக அறிவித்துள்ளது.

Procter & Gamble நிறுவன அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பேன்டீன் (Pantene), அஸி (Aussie), ஹெர்பல் எசன்ஸ் (Herbal Essences) மற்றும் வாட்ர்லெஸ் (Waterl ஆகிய பிராண்டுகளின் ஏரோசல் ட்ரை கண்டிஷனர் ஸ்ப்ரே மற்றும் ஏரோசல் ட்ரை ஷாம்பு ஸ்பிரே மற்றும் ஓல்டு ஸ்பைஸ் (Old Spice), ஹேர் புட் (Hair Food) ஆகிய பிராண்டின் ஏரோசல் ட்ரை ஷாம்பு ஆகிய பொருட்களை வாடிக்கையாளர் மட்டத்தில் இருந்து திரும்பப்பெற உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பென்சீன் (Benzene)

பென்சீன் மனித புற்றுநோய் உருவாக்கும் கெமிக்கல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பென்சீன் கெமிக்கல் உள்ளிழுத்தல், வாய்வழி மற்றும் தோல் வழியாக உடலுக்குள் சென்றால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது. கேன்சர் மட்டும் அல்லாமல் லுகேமியா மற்றும் எலும்பு மஜ்ஜையின் இரத்த புற்றுநோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்தக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

P&G விளக்கம்

தற்போது நிறுவனம் திரும்பப் பெற உள்ள 30 பொருட்களில் இருக்கும் பென்சீன் அளவு தினசரி பயன்படுத்தப்பட்டாலும் பாதகமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தாது என Environmental Protection Agency (EPA) செய்த எகஸ்போஷர் மாடலிங் மற்றும் புற்றுநோய் ஆபத்து மதிப்பீடுகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது என P&G நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

30 பொருட்கள்

தற்போது அறிவித்துள்ள 6 பிராண்டுகளின் கீழ் இருக்கும் 30 பொருட்களின் சில உற்பத்தி பேட்ச்-ல் மட்டுமே பென்சீன் தாக்கம் இருக்கிறது என்பதையும் P&G தனது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் இந்தப் பொருட்களுக்கான தொகை எப்படித் திருப்பிப் பெறுவது, எந்தப் பேச்ட் நம்பரில் இந்தப் பிரச்சனை உள்ளது என்பதற்கான விளக்கத்தையும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

உதாரணமாக வாட்டர்லெஸ் ட்ரை கண்ஷ்னர் வெயிட்லெஸ் ஸ்மூத் 3.6 அவுஸ் உற்பத்தி பிரிவு: 0002-0248 அல்லது 9298-9350, UPC: 37000543954

ஆய்வு

எங்களுடைய எந்தத் தயாரிப்பிலும் பென்சீன் உற்பத்தி பொருளாக இல்லாத போது, எப்படி இந்த 6 பிராண்டின் ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் பொருட்களில் பென்சீன் எப்படி வந்தது என ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது P&G. மேலும் P&G நிறுவனம் மேல குறிப்பிட்டு உள்ள 6 பிராண்டின் குறிப்பிட்ட பொருட்களில், அமெரிக்கத் தயாரிப்பில் மட்டுமே பாதிப்பு உள்ளது, மற்ற நாடுகளிலும், மற்ற பொருட்களிலும் இத்தகைய பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது Procter & Gamble நிறுவனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக