Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 டிசம்பர், 2021

உஷார்.! உங்கள் பணத்தை சூறையாடும் ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்.. இந்த 7 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்..

மொபைல் பாதுகாப்பில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்

மொபைல் பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனமான பிராடியோ, அதிகாரப்பூர்வ கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள புதிய பயன்பாடுகளைப் பாதிக்கும் மிக மோசமான ஜோக்கர் மால்வேரின் புதிய திரிபைக் கண்டறிந்துள்ளது. இந்த புதிய ஜோக்கர் மால்வேர் குறித்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை பிராடியோ இப்போது கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது. இந்த ஜோக்கர் மால்வேர் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் சுமார் 15 பிரபலமான பயன்பாடுகளைப் பாதித்து, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களைப் பாதிப்படையச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் பாதுகாப்பில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்

இது இப்போது மீண்டும் Google Play ஸ்டோரில் மறைமுகமாகத் திரும்பியுள்ளது. இந்த மால்வேர் கடந்த ஆண்டு கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள முறையான ஆண்ட்ராய்டு செயலிகளில் பாதிப்பை ஏற்படுத்தியதால், பெரிய மொபைல் பாதுகாப்பு அபாயத்தை உருவாக்கியது. கடந்த ஆண்டு கூகுளின் தலையீடு இருந்தபோதிலும், ஜோக்கர் மால்வேர், கூகுளின் பாதுகாப்பைத் தவிர்க்க அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்களைச் செய்து வெற்றிகரமாக மீண்டும் கூகிள் பிளே ஸ்டோர் தளத்தில் உள்நுழைந்து இப்போது புதிதாக 7 முக்கிய ஆப்ஸ்களை பாதித்துள்ளது.

முதலில் 15 ஆப்ஸ்.. இப்போது மீண்டும் 7 ஆப்ஸ்.. என்ன நடக்கிறது?

சமீபத்தில், சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா கூறுகையில், ஜோக்கர் மால்வேர் இதற்கு முன்னர் 15 ஆண்ட்ராய்டு பயன்பாடுகளைப் பாதித்திருந்தது என்பதைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளார். இந்த ஜோக்கர் மால்வேர் தீம்பொருள் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை எத்தனை முறை கூகிள் நிறுவனம் தேடிப்பிடித்து அகற்றிய போதிலும், ஜோக்கர் மால்வேர் மீண்டும் - மீண்டும் தொன்று கூகிளைக் கடுப்பேற்றி வருகிறது.

ஜோக்கர் மால்வேர் என்றால் என்ன, அது என்ன செய்யும்?

ஜோக்கர் மால்வேர் கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரபலமான ஆப்ஸை பாதித்து, அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும்போது பயனரின் மொபைலில் நுழைகிறது. ஜோக்கர் தீம்பொருள் அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்களை மேற்கொண்டு Google Play ஸ்டோர் பாதுகாப்பு அம்சத்தை நேர்த்தியாகக் கடந்துவிடுகிறது. Play store இன் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை இது எளிமையாகத் தொடர்ந்து தவிர்த்து வருகிறது. இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது மற்றும் அடிக்கடி மீண்டும் தோன்றக் கூடியது. ஆகையால், பயனர்கள் பதிவிறக்கம் செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பயனர்களுக்கே தெரியாமல் பணத்தைச் சுரண்டும் மால்வேர் ஆப்ஸா இது?

இந்த ஜோக்கர் மால்வேர் ஃபிளீஸ்வேர் (Fleeceware) என்ற மால்வேர் பிரிவின் கீழ் வருகிறது. ஃபிளீஸ்வேர் மால்வேர்கள் உண்மையில் ஆபத்தானவை, இவை பயனரின் தகவலைத் திருடி பணத்தைத் திருடுகிறது. பல ஆண்டுகளாக இந்த மோசமான தீம்பொருளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கக் கூகிள் கடுமையாகப் போராடி வருகிறது. அதன் பேலோடைப் பொறுத்தவரை, ஜோக்கர் தீம்பொருள் பயனர்களுக்குத் தெரியாமல் பின்னணியில் ஆன்லைன் சேவைகளுக்குச் சந்தா செலுத்துவதன் மூலம் பயனர்களிடமிருந்து ரகசியமாகப் பணத்தைத் திருடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி விபரத்தை செக் செய்தால் மட்டுமே உண்மை தெரியும்

இது ஆன்லைன் விளம்பரங்களைத் தானாக கிளிக் செய்யும் திறன் கொண்டது மற்றும் பணம் செலுத்துவதை ரகசியமாக அங்கீகரிக்க SMS இலிருந்து உங்கள் OTP எண்களையும் அணுகக் கூடியது என்பது தான் மிகப் பெரிய ஆபத்தாக இருக்கிறது. பயனர்களின் பணத்தைச் சூறையாட இந்த ஜோக்கர் மால்வேர் உதவுவதால், இது ஆபத்தான மால்வேர் ஆப்ஸாக கருதப்படுகிறது. பேங்க் ஸ்டேட்மென்ட்களைச் சரிபார்க்கும் போது மட்டுமே, அந்த பயனருக்கு அவர் அங்கீகரிக்காத பல ஆன்லைன் சேவைகளுக்குக்கான சந்தாவை ஜோக்கர் மால்வேர் பெற்றிருப்பதைக் கண்டறிய முடியும்.

ரஷ்யா சர்வர் உடன் இணையும் ஜோக்கர் மால்வேர்

ஜோக்கர் மால்வேரை சமாளிப்பது இப்போது கூகிளுக்கு பெரும் சவாலாக உள்ளது. Pradeo இன் அறிக்கையின் படி, 5 லட்சம் பயனர்களால் பயன்படுத்தப்படும் கலர் மெசேஜ் என்ற பிரபலமான செயலியானது இப்போது ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட பயன்பாடு ரஷ்யச் சேவையகங்களுடன் இணைப்புகளை உருவாக்குகிறது என்று பிராடியோவின் அறிக்கை கூறுகிறது. இத்துடன் சேர்த்து இன்னும் 6 ஆப்ஸ்கள் ஜோக்கர் மால்வேரால் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது.

ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள்

சமீபத்தில் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்ட ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்களை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளோம். இந்த ஜோக்கர் மால்வேர் தொற்றைத் தடுக்க உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருந்து இந்த 7 ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யும்படி கூகிள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல் இதோ

இந்த 7 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள் மக்களே
  1. கலர் மெசேஜ் (Color Message)
  2. சேஃப்டி ஆப்லாக் (Safety AppLock)
  3. கன்வீனியன்ட் ஸ்கேனர் 2 (Convenient Scanner 2)
  4. புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் & எஸ்எம்எஸ் (Push Message-Texting&SMS)
  5. இமோஜி வால்பேப்பர் (Emoji Wallpaper)
  6. செப்பரேட் டாக் ஸ்கேனர் (Separate Doc Scanner)
  7. பிங்கர்டிப் கேம் பாக்ஸ் (Fingertip GameBox)

மால்வேர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்

இந்த 7 ஆப்ஸ்களும் மோசமான ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதனால், இந்த ஆப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது. இந்த 7 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் கூட உங்கள் போனில் இருந்தால் அவற்றை உடனடியாக டெலீட் செய்யுங்கள். இந்த ஆபத்தான ஆப்ஸ்களை உங்களுக்குத் தெரிந்தவர்கள் கூட பயன்படுத்த வாய்ப்பிருப்பதனால் இந்த தகவலை அவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். எப்போதும் உங்கள் போனில் ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்டிமால்வேர் சாப்ட்வேர்களை பயன்படுத்துவது சிறப்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக