Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 22 டிசம்பர், 2021

ரூ. 49 விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வாங்கலாம்.. உடனே முந்துங்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே..

கம்மி விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வாங்க வாய்ப்பு

இந்தியாவில் ஓவர்-தி-டாப் (OTT) சேவையைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மடமடவென உயர்ந்துவிட்டது. அமேசான் பிரைம், நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களை மக்கள் விரும்பி பயன்படுத்தத் துவங்கியதால் இந்தியாவில் OTT தளங்களுக்கு இடையிலான போட்டி கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், அதிக பயனர்களைக் கவர்ந்திழுக்க OTT சேவை நிறுவனங்கள் பல புதிய சலுகைகள் மற்றும் மலிவு விலை கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

கம்மி விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வாங்க வாய்ப்பு

இந்த வரிசையில் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் யாரும் எதிர்பார்த்திடாத மலிவு விலையில் 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிமுகம் செய்துள்ள இரண்டு புதிய மலிவு திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறது என்றும், இந்த திட்டங்கள் எத்தனை நாட்கள் செல்லுபடியாகும் என்பது போன்ற முழு விபரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். கம்மி விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களை வாங்கி பயன்படுத்தலாம்.

ஸ்கிரீன்ஷாட் உடன் வெளியிடப்பட்ட மலிவு விலை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா

அனைத்து முன்னணி OTT இயங்குதளங்களும், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியச் சந்தையில் தங்கள் சேவையின் சிறந்ததைச் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகத் தொடர்ந்து அவற்றின் விலைக் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்து வருகின்றன. சமீபத்திய நடவடிக்கையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியப் பயனர்களுக்கு புதிய சந்தா திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை "u/One-Cost-4363" என்ற Reddit பயனர் திட்டத்தின் ஸ்கிரீன்ஷாட் உடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரூ. 199 மற்றும் ரூ. 49 திட்டத்தை அறிமுகமா?

Disney+ Hotstar வழங்கும் ரூ. 199 திட்டம் மொபைல் பயனர்களுக்கு மட்டுமே, மேலும் இது 720p வீடியோ தரத்தில் அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் அணுகலுடன் ஆறு மாதங்களுக்குச் சந்தா செல்லுபடியாகும். ஸ்போர்ட்ஸ் மற்றும் திரைப்படங்களில் நடுவே இந்த திட்டம் விளம்பரங்களைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ. 299 ஆகும். ஆனால், பயனர்கள் இப்போது வெறும் ரூ. 199 திட்டத்தை வாங்குவதற்கான அறிமுக சலுகையைப் பெறுவார்கள். அவர்களுக்கு ரூ.100 தள்ளுபடி இதன் மூலம் வழங்கப்படுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரூ. 49 திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT இயங்குதளம் பயனர்களுக்காக ரூ. 49 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஒரு மாத சந்தா செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் அசல் விலை ரூ. 99 ஆகும். ஆனால், பயனர்கள் அறிமுகச் சலுகையைப் பெறுவதன் மூலம் இப்போது ரூ. 49 விலையில் இந்த திட்டத்தை வாங்க முடியும். இதில் நிறுவனம் பயனர்களுக்கு ரூ. 50 தள்ளுபடி அளிக்கிறது. எனவே திட்டத்தின் மொத்தச் செலவு மாதத்திற்கு வெறும் ரூ. 49 என்ற மலிவு விலையில் இப்போது வாங்கக் கிடைக்கிறது.

இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது வரை கிடைக்கும்?

இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை போலத் தான் தெரிகிறது. இது ஒவ்வொரு பயனருக்கும் இதே விலையில் கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை. மேலும், இது நிறுவனத்தால் பரிசோதனை செய்யப்பட அறிமுகம் செய்யப்படும் சோதனை திட்டமாக வாய்ப்புள்ளது என்பதனால் முந்திக்கொள்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை இந்த சலுகை விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மக்களிடம் இதன் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைக் காண மட்டுமே நிறுவனம் இதைச் சோதிக்கிறது என்றும் சிலர் கூறியுள்ளனர். எது எப்படியாக இருந்தால் என்ன, உங்களுக்கு இப்படி மலிவு விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா கிடைத்தால் மகிழ்ச்சி தானே.

இந்த திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அறிவிப்பின் படி, இது மொபைலில் மட்டும் பயன்படுத்தும் திட்டமாக இருக்கும், இதில் பயனர்களுக்கு HD (720p) தரத்தில் வீடியோ சேவை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இது மிகவும் மலிவான விலை திட்டம் என்பதனால், இத்திட்டத்தை ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியாகத் தான் செயல்படுகிறது. ஆனாள், இவற்றின் சந்தா செல்லுபடியாகும் காலம் மட்டும் வேறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளடக்கத்தை இப்போது வெறும் ரூ. 49 விலையில் இயக்க முடியும் என்பது மகிழ்ச்சி.

இப்போது அனைவருக்கும் கிடைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டத்தின் விலை என்ன?

மாற்றாக, இந்தியப் பயனர்களுக்கு இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போர்ட்டலில் இருந்து ரூ. 399, ரூ. 899 மற்றும் ரூ. 1,499 விலையில் மூன்று வெவ்வேறு திட்டங்கள் கிடைக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ரூ. 399 திட்டமானது விஐபி திட்டமாகும். இது டிவி மற்றும் லேப்டாப் என்று ஒரே ஒரு பயனர்களுக்கானது. அதேபோல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் ரூ. 899 திட்டமானது சூப்பர் திட்டமாகும். இது 2 டிவைஸில் ஒரே நேரத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது முழு எச்டி 1080P தரத்தில் வீடியோவை வழங்குகிறது.

எந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டம் பெஸ்ட்டானது தெரியுமா?

இறுதியாக ரூ. 1499 விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டம் உங்களுக்கு ஒரே நேரத்தில் 4 டிவைஸில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது உங்களுக்கு 4K வீடியோ தரத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவையை எந்தவித விளம்பர தொந்தரவும் இல்லாமல் வழங்குகிறது. ஸ்போர்ட்ஸ் மற்றும் திரைப்படங்களுக்கு இடையே விளம்பரங்களைப் பார்க்க விரும்பாத பயனர்களுக்கு பிரீமியம் திட்டம் சிறந்த திட்டமாகும். இந்த மூன்று திட்டங்களும் ஒரு வருடச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக