
அசுஸ் நிறுவனம் இந்தியாவில் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ரூ.32,490-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் ஆனது 14-இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு1920 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம், 84% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த சாதனத்தை பயனர்கள் விண்டோஸ் 11க்கு மேம்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில் 11th-Gen Intel Core Tiger Lake பிராசஸர் வசதி உள்ளது. எனவேஇயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
குறிப்பாக இன்டெல் கோர் ஐ3 - 111G4 with Intel UHD GPU, இன்டெல் கோர் ஐ5-1135G7 with Intel Xe GPU மற்றும்இன்டெல் கோர் ஐ7- 1165G7 with Intel Xe GPU உள்ளிட்ட அம்சங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்தில் 16ஜிபி ரேம் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
அதேபோல் இந்த சாதனம் noise cancellation தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த லேப்டாப்சாதனம் சூடாவதை தடுக்க சிறந்த தொழில்நுட்ப வசதி உள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடலில் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட், ப்ளூடூத் வி5.2, இரண்டு யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-ஏ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், மைக்ரோஎஸ்டி கார்ட் ரீடர், ஒரு எச்டிஎம்ஐ போர்ட், ஒரு விஜிஏ போர்ட், Gigabit RJ-45 LAN போர்ட், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், வைஃபை 802.11ஏஎக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
குறிப்பாக இந்த லேப்டாப் 42 மணிநேர பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 3-cell 42Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசுஸ் ExpertBook B1400 லேப்டாப். அதேபோல் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் மாடல்.
புதிய அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் ஆனது விரைவில் அசுஸ் ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1.45 கிலோகிராம் எடை கொண்டது இந்த புதிய லேப்டாப் மாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக