Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 24 டிசம்பர், 2021

இனி அதை தேட வேண்டாம்: சத்தமின்றி இரண்டு சிறந்த திட்டங்களை நீக்கிய விஐ- இருந்தாலும் ஒரு டுவிஸ்ட் இருக்கு!

வோடபோன் ஐடியா (விஐ)

வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் சமீபத்தில் ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699-க்கு நான்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ.699 என்ற விலையில் அறிமுகப்படுத்த திட்டமானது முன்னதாக ரூ.701 விலையில் வழங்கிய அதே நன்மைகளை வழங்கியதால் இந்த திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வோடபோன் ஐடியா (விஐ)

வோடபோன் ஐடியா (விஐ) ஆனது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நன்மையுடன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் நிறுவனமாக மாறி வருகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் அத்தகைய சலுகைகள் வழங்கும் இரண்டு திட்டங்களை நீக்கியுள்ளது. ரூ.601 மற்றும் ரூ.701 விலையில் கிடைக்கும் இந்த திட்டங்கள் இனி வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகை

அதேபோல் விஐ தனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சலுகையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்ட விலையை ரூ.501 மற்றும் ரூ.901 என குறைத்து அறிவித்துள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சலுகையுடன் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இரண்டு திட்டங்கள் இவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா (விஐ)

வோடபோன் ஐடியா ரூ.601 மற்றும் ரூ.701 திட்டங்களை மீண்டும் கொண்டு வரலாம் எனவும் அதன் விலை உயரலாம் எனவும் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா (விஐ) சமீபத்தில் ரூ.155, ரூ.239, ரூ.666 மற்றும் ரூ.699 என்ற விலையில் நான்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ.701 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமும் ரூ.699 திட்டமும் ஏறக்குறைய அதே பலன்களை வழங்குகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சலுகை

ரூ.701 ஸ்மார்ட்போனானது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் 56 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.699 திட்டமும் தினசரி 3 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தா திட்டத்தின் மதிப்பு சற்று அதிகமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக விஐ அதன் சலுகைகளை வழங்கும் ரூ.701 திட்டத்தை நீக்கியிருக்கிறது. ரூ.601 திட்டமானது டேட்டா வவுச்சராக மட்டுமே இருக்கிறது. ஆனால் விஐ நிறுவனம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்கும் புதிய டேட்டா திட்டங்களை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் இரண்டு திட்டங்களின் விலை தற்போது ரூ.501 மற்றும் ரூ.901 ஆகிய விலையில் தினசரி 3 ஜிபி டேட்டாவை முறையே 28 நாட்கள் மற்றும் 70 நாட்களுக்கு வழங்குகிறது. இரண்டு திட்டங்களும் விஐ ஹீரோ நன்மைகள், வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகின்றன.

தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை

வோடபோன் ஐடியாவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Vi Movies & TV Basic அணுகலுடன் வருகிறது இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம். ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி அளவிலான டேட்டா பேக்அப்பைப் பெறுவார்கள். குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும்.

திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classic-க்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்தத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப் நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக