-----------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------------
காதலி : நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா பாத்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வெச்சிருந்ததால நீங்க தப்பிச்சீங்க..
காதலன் : அப்படியா! என்ன சொன்னாங்க?
காதலி : நல்ல நாளும், பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம, ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுன்னு திட்டினாங்க..!
காதலன் : 😡😡
-----------------------------------------------------
அமலா : அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படி சொல்றே?
விமலா : விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கிறார்?
அமலா : 😂😂
-----------------------------------------------------
மாநகர செடி...!!
-----------------------------------------------------
'இரு புறமும் நதியோடும்
வண்டல் நகர் செடியது.
மெல்லிய இலையும்
நறுமணப் பூவும்
துளிர்க்கும் அழகும்
சௌந்தர்யம்.
வேரோடு பிடுங்கி
துர்நாற்ற நதியோடும்
பெரு நகரில் நட்டான்.
அழுக்கு நீரை குடித்தன வேர்கள்.
அமிலக்காற்றில் ஆடின இலைகள்.
குருத்துச் சிறுத்து கருகின துளிகள்.
எல்லாம் கொஞ்ச காலம்தான்.
இலையும் மணமும் குணமும் மாறி
தளுதளுத்து வளர்கிறது...
மேலும் ஒரு மாநகர செடி!"
-----------------------------------------------------
இன்றைய புதிர்...!!
-----------------------------------------------------
1. 6 🍞 ரொட்டிகளை சாப்பிட 6 🐀எலிகளுக்கு 6 🕐நிமிடம் ஆகும். அப்படியென்றால், 100 🍞 ரொட்டிகளை 100 🕐 நிமிடங்களில் சாப்பிட எத்தனை 🐀எலிகள் தேவைப்படும்.
2. ஐந்து 9-களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், ஆனால் விடை 10 என வர வேண்டும். அது எப்படி?
விடை:
1. 6 🐀எலிகள்
விளக்கம் :
6 🐀எலிகளுக்கு 6 🍞 ரொட்டிகளை சாப்பிட 6 🕐நிமிடம் தேவைப்படும் எனில், 6 🐀எலிகளுக்கு 1 🍞 ரொட்டியை சாப்பிட 1 🕐நிமிடம் மட்டுமே ஆகும். எனவே 6 🐀எலிகளும் 100 🕐நிமிடத்தில் 100 🍞 ரொட்டிகளை சாப்பிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக