
இந்த கோயில் எங்கு உள்ளது?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிட்டாபுரம் என்னும் ஊரில் அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருநெல்வேலியிலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி தருகிறாள்.
இந்த அம்மன் அனைத்து மதத்தினருக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறாள்.
இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி, வடவாயில் செல்வி, நெல்லை மாகாளி என பல பெயர்கள் உள்ளன.
கோயில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
பீடத்தின் மேல் வலது காலை தூக்கி வைத்து, இடது காலை மடக்கி, வலது கையில் கீழ் நோக்கிய சூலம் வைத்து, காலுக்கடியில் அசுரனுடன் அருள்பாலிக்கிறாள்.
வேறென்ன சிறப்பு?
இங்கு பிள்ளையார், மாடன், மாடத்தி, பிரம்மராக்ஷி, பேச்சி, 14 கன்னியர்கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
வைகாசியில் பிட்டாபுரத்து அம்மனுக்கு தேர் திருவிழா முடிந்த பின் தான் ஆனி மாதத்தில் நெல்லையப்பருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
கொடிமர மண்டபத்தின் தென்மேற்கு முகமாக சிதைவுற்ற பிள்ளையார் அதிக சக்தியுடன் விளங்குகிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதத்தில் 10 நாள் திருவிழாவும், கடைசிநாளில் தேரோட்டமும் நடத்தப்படுகிறது.
ஆடி, தை மாதங்களின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
கார்த்திகை தீபமும், தைமாத பத்ர தீபமும், கஞ்சிப்படையலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் இத்தலத்தை சுற்றி வருகிறார்கள்.
பிறந்த குழந்தைகளை கூட இத்தலத்திற்குள் கொண்டு வரலாம். எந்த தீட்டும் கிடையாது.
பிள்ளைகளுக்கு பயத்தால் வரக்கூடிய 64 வகையான சீர் நோய்களுக்கு வேர்கட்டி மை இடுவார்கள்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பிட்டாபுரத்து தேவிக்கு 'பிட்டு" நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக