Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 17 டிசம்பர், 2021

பாலத்தையே திருட முடியுமா? மலைக்க வைக்கும் புதுவித திருட்டு

 Bizarre Theft: பாலத்தையே திருட முடியுமா? மலைக்க வைக்கும் புதுவித திருட்டு

எதையெல்லாம் திருடுவது என்று மிகப் பெரிய பட்டியல் போட்டாலும், அதில் இடம் பெறாத அல்லது இடம் பெற முடியாத ஒன்று பாலம். ஆனால், பாலத்தையே திருடிய கதையை கேள்விப்பட்டதுண்டா?

இது அமெரிக்காவின் புத்திசாலி திருடர்களின் நூதமான திருட்டு சம்பவம். ஓஹியோவில் கடந்த மாதம் 58 அடி பாலம் ஒன்று திடீரென்று காணாமல் போனது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

உண்மையில் இவ்வளவு பெரிய பாலத்தை எப்படி திருடமுடியும்? இப்படி ஒரு திருட்டைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை (Bizaree Theft) என்று போலீசார் கூறுகின்றனர். 

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் அக்ரோனில் உள்ள ஒரு சிற்றோடைக்கு அருகிலுள்ள ஒரு வயல்வெளியில் நிறுவப்பட்ட 58 அடி பாலத்தை திருடர்கள் திருடியுள்ளனர்.

நவம்பர் 3 ஆம் தேதி, பாலத்தில் உள்ள பலகைகளில் சில காணவில்லை. அதை உள்ளூர்வாசிகள் பார்த்தனர். ஒரு வாரம் கழித்து ஒரு நாள், அங்கு பாலமே காணவில்லை. அதைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தப் பாலம், 2000வது ஆண்டில் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது. ஆனால் பின்னர் அதை வேறொரு திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதை பிரித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக, திறந்தவெளியாக இருந்த வயல்வெளியில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாலம் திருடப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பாலத்தை பிரித்து, அதில் இருந்து கிடைக்கும் பொருட்களை விற்று பணம் சம்பாதிப்பதற்காக பாலம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால், 10 அடி அகலமும், 6 அடி உயரமும் கொண்ட இந்த சிறப்புப் பாலம்,  பாலிமர் அடிப்படையிலான பொருட்களால் ஆனது என்பது திருடர்களுக்கு தெரிந்திருக்காது பாவம். இந்த சிறப்பு பாலத்தின் மூலப்பொருட்களை விற்பதும், மறுசுழற்சி செய்வதும் கடினம் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருடர்கள் பாலத்தை பிரித்து எப்படி எடுத்துச் சென்றார்கள் என்று கேள்வி எழுகிறது. இந்த வினோத திருட்டு போலீசாரை மட்டுமல்ல, கேட்கும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இந்த திருட்டை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று போலீசார் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் பாலத்தையே ஆட்டைய போட்டவர்கள் புத்திசாலிகள் தான். இனி திருடனை துரத்தும் போலீஸ் பாலத்தை கண்டு பிடித்தால், அந்த செய்தியும் விசித்திரமாக இருக்கலாம். 

சரி கடத்தப்பட்ட பாலத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் முப்பது லட்சம் ரூபாய் ($40,000) என்று நகரின் பொறியியல் துறை மதிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக