Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 17 டிசம்பர், 2021

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ப்யூவல் செல் பேருந்து... 30 கிலோ நிரப்பினா 450 கிமீ தூரம் பயணிக்கலாம்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ப்யூவல் செல் பேருந்து... 30 கிலோ நிரப்பினா 450 கிமீ தூரம் பயணிக்கலாம்!

உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் பேருந்து ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பேருந்தில் முழுமையாக 30 கிலோ ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் அதிகபட்சமாக 450 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இதுபோன்று பேருந்து குறித்த இன்னும் பல முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்டியன்ட் ஆய்வகம் மற்றும் ஆர்&டி ஆய்வகம் ஆகிய இரண்டும் இணைந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் பேருந்தை வடிவமைத்திருக்கின்றன. இந்த ஹைட்ரஜன் ப்யூவல் செல் தொழில்நுட்பம் சிஐஎஸ்ஆர் - என்சிஎல் (Council of Scientific and Industrial Research - National Chemical Laboratory)மற்றும் சிஐஎஸ்ஆர் - சிஇசிஆர்ஐ (Central Electrochemical Research Institute) ஆகியவற்றுடனான கூட்டணியில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வாகனங்களில் பயன்படுத்துவதற்கான ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை விவசாய எச்சங்களிலிருந்து நேரடியாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை சென்டியன் ஆய்வகம் மிக சமீபத்தில் கண்டுபிடித்தது. இதுவே, உலகின் முதல் விவாசய எச்சத்திலிருந்து ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.

இந்த தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் எஞ்ஜின் மற்றும் ஹைட்ரஜன் ப்யூவல்லில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியைச் சேகரித்து வைப்பதற்கான பேட்டரி பேக் ஆகியவற்றையும் அது சென்டியன்ட் ஆய்வகம் உருவாக்கியது.

இவற்றைப் பயன்படுத்தியே தற்போது ஹைட்ரஜன் ப்யூவல் செல்லால் இயங்கும் நாட்டின் முதல் பேருந்தை நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. இந்த பேருந்து 9 மீட்டர் நீளம், 32 இருக்கைகள் வசதியைக் கொண்டது. ஏர் கண்டிஷன் போன்ற நவீன கால சிறப்பு அம்சங்களும் இப்பேருந்தில் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, மிக அதிகளவு ரேஞ்ஜை வழங்கும் வகையிலும் இப்பேருந்தை சென்டியன்ட் ஆய்வகமும், ஆர்&டி ஆய்வகமும் உருவாக்கியிருக்கின்றது. அதாவது, 30 கிலோ ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் சுமார் 450 கிமீ தூரம் வரை இப்பேருந்து பயணிக்கும்.

மேலும், பேருந்தின் தோற்றமும் மிக சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. ஆம், ரேஞ்ஜ் வழங்குவதில் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடாது என்பதற்காக மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இடம் பெற்றிருக்கும் ப்யூவல் செல் தொழில்நுட்பம் ஹைட்ரஜன் மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையால், இதன் உமிழ்வு குழாய் வாயிலாக தண்ணீரே வெளி வரும். இது சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதேநேரத்தில் இது மின்சார வாகனங்களைக் காட்டிலும் அதிக பயனுள்ள வாகனமாக இருக்கின்றது. ஆம், ஓர் மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 6 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

ஆனால், ஹைட்ரஜன் ப்யூவல் செல்லை நிரப்ப பெட்ரோல், டீசலை நிரப்புவதற்கான நேரமே போதும். ஆகையால், நேரமும் மிச்சம், அதேநேரத்தில், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பையும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் ஏற்படுத்தாது. இத்தகைய ஓர் வாகனத்தையே நாட்டின் இரு முன்னணி ஆய்வகங்கள் தற்போது வடிவமைத்திருக்கின்றது.

அதிலும், இப்பேருந்து உள்நாட்டிலேயே வைத்து உருவாக்கப்பட்டிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. இதுமாதிரியான வாகனமே எதிர்காலத்தின் தேவையாக அறியப்பட்டு வருகின்றது. சமீப காலமாக எரிபொருள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதனை சமாளிக்கும் பொருட்டு மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர். ஆனால், பலர் மின் வாகனங்களை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன என்பதால் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அத்தகையோருக்கு, ஃப்யூவல் செல்லால் இயங்கும் வாகனங்கள் நல்ல தீர்வாக அமைய இருக்கின்றன. இப்புதிய ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் பேருந்து குறித்து சென்டியன்ட் ஆய்வகத்தின் தலைவர் ரவி பண்டிட் கூறியதாவது, "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல்லால் இயங்கும் பேருந்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சிஎஸ்ஐஆர்-என்சிஎல் உடன் இணைந்து, எங்களின் பலமான தொழில்நுட்பக் குழு பணியாற்றியிருக்கின்றது. எங்களின் இந்த முயற்சி இந்தியாவின் பிற நகரங்களையும் பூஜ்ஜியம்-உமிழ்வு வாகன உற்பத்தியை நோக்கி நகர்த்த உந்தும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக