இந்த கோயில் எங்கு உள்ளது?
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நேமம் என்னுமிடத்தில் அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 40 கி.மீ தூரம் உள்ள காரைக்குடி சென்று, கீழச்செவல் பட்டி, ராங்கியம் செல்லும் ரோட்டில் சுமார் 12 கி.மீ தூரத்தில் நேமம் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.
கோயில் முன்பு சோழதீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபடுகின்றனர்.
கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார்.
நகரத்தார் திருப்பணி செய்த ஒன்பது முக்கிய கோயில்களில் இதுவும் சிறப்பானதாகும்.
இக்கோயில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன.
வேறென்ன சிறப்பு?
விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது.
மீனாட்சி திருக்கல்யாண கோலம், காலசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவம், மார்கண்டேயர் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் (பைரவர்) இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
அத்துடன் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகளும் உள்ளன.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பிரதோஷம், சிவராத்திரி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் முன்னேற்றம் ஏற்பட, திருமணம் கைகூட இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், மாலை சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக