------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
------------------------------------------------
லிட்டில் பிரின்சஸ் : இந்தாங்கப்பா... இத டேஸ்ட் பண்ணுங்க...
அப்பா : நீ சமையல் பன்றது ஈசினு சொன்னப்ப கூட பொறுத்துகிட்டேன்... சுடு தண்ணிய கொண்டு வந்து டேஸ்ட் பண்ண சொல்ற பாத்தியா... இத தான்மா என்னால தாங்க முடியல...
லிட்டில் பிரின்சஸ் : 😜😜
------------------------------------------------
அப்பா : பொண்ணு பாக்க வந்த பையன தனியா பேசனும்னு கூட்டிட்டுபோய் எதுக்குமா அடிச்ச?
லிட்டில் பிரின்சஸ் : அது ஒன்னும் இல்ல டாடி... மம்மி கிட்ட நீங்க சமாளிக்கிற மாதிரி அவரு சமாளிப்பாரான்னு பாத்தேன்...
அப்பா : 😯😯
------------------------------------------------
யார் தைரியசாலி?
------------------------------------------------
கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்படும்போது...
கணவன் : உன்ன பார்த்து நான் பயப்படுறேன்னு நினைக்காத...
மனைவி : பொய் சொல்லாதீங்க... என்ன பொண்ணு பார்க்க வரும்போது 5 பேர் கூட்டிட்டு வந்தீங்க..
நிச்சயம் பண்ணும்போது 50 பேர் கூட்டிட்டு வந்தீங்க...
கல்யாணம் பண்ணும்போது 500 பேர் கூட்டிட்டு வந்தீங்க...
மனைவி : ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்க வீட்டுக்கு தனியா தான வந்தேன்....
இப்போ புரியுதா யாரு தைரியசாலினு...
கணவன் : 😥😥
------------------------------------------------
இரட்டை காகங்களை பார்த்தால் நாள் சிறக்கும்...!!
------------------------------------------------
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.
ஒரு நாள் ஜோதிடர் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்..." என்று நம்பிக்கை ஊட்டினார்.
மன்னன் சேவகனை அழைத்து, 'காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்கு தெரிவிக்க வேண்டும்!" என்று கட்டளையிட்டார்.
அதன் பின், தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலைய தொடங்கிவிடுவான்.
ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்து தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.
'அடடா! நல்ல சகுனம்... இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார்..." என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னார்.
இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினார்.
அதற்குள் ஒரு காக்கை பறந்து போய்விட்டது.
மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு" என்று உத்தரவிட்டார்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான்...
மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி" என்று உறுமினார்.
அதற்கு சேவகன் சொன்னான், 'மகா மன்னரே! இன்று நான் மட்டும் தான் அதிகாலையில் இரட்டை காக்கைகளைப் பார்த்தேன்! கை மேல் பலன் கிடைத்துவிட்டது அல்லவா?" என்றார்.
மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. மன்னர் தன் தவறை உணர்ந்து அந்த சேவகனை விடுதலை செய்தார்...
அன்றிலிருந்து மன்னர் எதையும் கண்மூடி தனமாக நம்புவதில்லை...
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக