பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் ஒரு சில திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது
என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும்
திட்டங்களில் அதிக சலுகைகள் கிடைக்கிறது. ஆனால் இந்நிறுவனம் அனைத்து
இடங்களிலும் 4ஜி சேவையைகொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனத்த்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்களுக்குப் பதிலாக 425 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் திருத்தப்பட்டது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் சமீபத்தில் வெளியான இந்தியா டுடே அறிக்கையின்படி, இந்த ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரும் டிசம்பர் 31 வரை மட்டுமே அந்த கூடுதல் வேலிடிட்டி சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் விளம்பரத் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31-க்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ பெறமுடியும்.
குறிப்பாக 2022 முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்களாகமாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 24ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். கால் அழைப்பு நன்மை மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் 365 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைக்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல்
நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மயை
வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி
100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின்
வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு
இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர்,இணைய வேகம் 80
கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்இந்ததிட்டத்தில் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக