
ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் முக்கிய பிரச்சனையாக இருப்பது, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள். டெலிமார்க்கெட்டிங், இன்ஷூரன்ஸ், கிரெடிட் கார்டு போன்றவைகளுக்காக அதிகளவு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்ட Truecaller வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2020 அறிக்கையின்படி ஒன்பதாவது இடத்தில இருந்த இந்தியா இந்தாண்டு நான்காவது இடத்தில் உள்ளது.
டெலிமார்க்கெட்டிங் சம்மந்தப்பட்ட ஸ்பேம் அழைப்புகள் 93.5% வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு சராசரியாக 32.9 ஸ்பேம் அழைப்புகளுடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல ஒரு மாதத்திற்கு சராசரியாக 18.02 ஸ்பேம் அழைப்புகளுடன் பெருவில் இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உக்ரைனும், நான்காவது இடத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் 6,64,000 அழைப்புகளும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 27,000 அழைப்புகளும் வருவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் நிலவும் அதிகமான மோசடிகளில் ஒன்று KYC மோசடி. இதன் மூலம் வாங்கி, டிஜிட்டல் கட்டண சேவை குறித்து மோசடி நடக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக