சியோமி
12 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள்
கசிந்துள்ளன. சியோமி 12 சாதனமானது வளைந்த காட்சி வடிவமைப்போடு, 5000
எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் முழு விவரங்களை
பார்க்கலாம்.சியோமி 12 ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் அடுத்த முதன்மை ஸ்மார்ட்போனாக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 12 தொடரில் சியோமி 12, சியோமி 12 எக்ஸ், சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இடம்பெறும் என கூறப்படுகிறது. சின தொழில்நுட்ப நிறுவனமான சியோமியிடம் இருந்து சியோமி 12 தொடர் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் சமீபத்திய கசிவுத் தகவலின்படி சியோமி 12 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கசிவுத் தகவலின்படி வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பல்வேறு வடிவமைப்பு அம்சங்களை காண்பிக்கும் ரெண்டர்கள் தொகுப்பு வெளியாகியுள்ளது.
சியோமி 12 சாதனத்தின் விவரக்குறிப்புகள்சியோமி 12 சாதனத்தின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த சியோமி 12 ஸ்மார்ட்போனின் கசிவு ஆன்லீக்ஸ் மற்றும் ஜௌடன்ஸ் மூலம் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் மையமாக சீரமைக்கப்பட்ட துளை பஞ்ச் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 சாதனமானது முழு எச்டி ப்ளஸ் + (1,920x1,080 பிக்சல்கள்) தெளிவுத்திறனை வழங்கும் வளைந்த டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கூடுதலாக டிஸ்ப்ளேவில் உள்ளமைக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.
சியோமி 12 சாதனத்தின் நிலையான பதிப்பு ஆனது சீனாவின் கட்டாய சான்றிதழ் (3சி) இணையதளத்தில் காணப்பட்டது. இந்த பட்டியலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 67 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கசிவு அடிப்படையில் சியோமி 12 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது யூஎஸ்பி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் திறன்களுடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் இயக்கப்படும் எனவும் இதில் 8 ஜிபி ரேம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவோடு வரும் எனவும் இதில் ப்ளூடூத் வி5.2 இணைப்பு ஆதரவுகள் மற்றும் இரட்டை சிம் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது.
சியோமி 12 விலை குறித்து பார்க்கையில், இந்த சாதனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சியோமி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை போன்றே இந்த சாதனம் விலை ரூ.69,990 என இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி 12 சாதனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் விரைவில் தனது புதிய சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்தஸ்மார்ட்போன் மாடல் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 12 Standard Edition ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக