Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 டிசம்பர், 2021

ரயில் பயண விதிமுறைகள்: TTE கூட டிக்கெட்டை பரிசோதிக்க முடியாதா? மிடில் பெர்த் ரூல்ஸ் தெரியுமா உங்களுக்கு?

ரயில் பயணத்தின் போது நீங்கள் பயன்டுத்த வேண்டிய விதிகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?

இந்திய ரயில்வே அதன் பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தப் பல விதமான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்திய ரயில்வே அதன் IRCTC இணைய வழி பயனர்களுக்கான புதிய கட்டாய விதியையும் வெளியிட்டது. இது போல், பயனர்களின் பயண நேரத்தில் அவர்களைத் தொந்தரவு செய்ய முடியாத சில விதிமுறைகளையும் இந்திய ரயில்வே பின்பற்றுகிறது. இந்த விதிமுறையின் படி, டிக்கெட் பரிசோதகரான TTE கூட உங்களைத் தொந்தரவு செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், எப்போதெல்லாம் TTE உங்கள் டிக்கெட்டை சோதிக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

ரயில் பயணத்தின் போது நீங்கள் பயன்டுத்த வேண்டிய விதிகள் என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?

பயணத்தின் போது நீங்கள் ரயிலில் பயணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் யாரும் உங்களைத் தொந்தரவு செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த விதிகளைத் தெரிந்துகொள்வது சிறப்பானது. இந்த விதிமுறையின் படி குறிப்பிட்ட பயண நேரத்தில் யாரும் உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது என்பதே உண்மை. சரி, எந்த நேரத்தில் எல்லாம் இந்த விதி பயன்படும்,நீங்கள் பயணம் செய்யும் மிடில் பெர்த் இருக்கையின் விதிகள் என்ன? என்பது போன்ற பல தகவலை இந்த பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் முக்கியமான வாழ்கை பாதை இது தானா?

இந்திய இரயில்வே தான் இந்தியாவின் முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று அழைக்கப்படுகிறது. இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்திய ரயில்வே தற்போது 1,490 அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களையும், 5,397 புறநகர் ரயில் சேவைகளையும், 947 பயணிகள் ரயில்களையும் இயக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. ரயிலில் பயணம் செய்யும் போது, ​​ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ரயிலில் எழும் சிக்கலுக்கு IRCTC வழங்கும் விதிமுறைகள்

இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இயல்பான ஒன்று தான் என்றாலும் கூட, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குச் சத்த தொல்லை, டிக்கெட் சரிபார்ப்பு, ரயில்களில் இருக்கை பயன்படுத்துவதில் சிக்கல் என்பது போன்ற பல பிரச்சனைகளை மக்கள் இன்னும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். பயணத்தின் போது ஏற்படும் இந்த சிக்கலை மக்கள் அவர்களின் பெருந்தன்மையான மனதுடன் அனுசரித்து பயணம் செய்வது பழக்கமாகிவிட்டது. இருப்பினும் ரயில்வேவின் விதிகள் என்ன சொல்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்வது பெரிதும் உதவும்.

TTE கூட இந்த நேரத்தில் உங்களிடம் டிக்கெட் கேட்க கூடாதா?

இந்திய ரயில்வேவின் விதிகளின்படி, பயணத்தின் போது நீங்கள் தூங்கினால், TTE கூட உங்களை அழைத்து டிக்கெட்டை பரிசோதனை செய்ய முடியாது. காலையிலிருந்து ஒரு பயணி ரயிலில் பயணம் செய்தால், இரவு 10 மணிக்குப் பிறகு TTE உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று ரயில்வே விதி சொல்கிறது. அதாவது, இரவு 10 மணிக்குப் பிறகு பயணச்சீட்டு அல்லது அடையாள அட்டையைக் காட்டுமாறு TTE-யால் பயணிகளைக் கேட்க முடியாது என்பதை இந்த விதி குறிப்பிடுகிறது.

TTE-க்கு உங்களின் பயணச் சீட்டை பரிசோதிக்க எப்போது அனுமதி உண்டு?

அப்படியானால், எப்போதெல்லாம் TTE-க்கு உங்களின் பயணச் சீட்டை பரிசோதிக்க அனுமதி உண்டு என்று பார்க்கலாம், ரயில்வே நிர்வாகத்தின் தகவல் படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க TTE-க்கு உரிமை உண்டு. காலையிலிருந்து பயணம் செய்யும் பயணிகள் தூங்கவிட்டால், TTE அவர்களை எழுப்பலாம். ஏனென்றால், TTE இடம் அனைத்து பயணிகளின் பட்டியல் உள்ளது. அதில் எந்த இருக்கையில் எந்த பயணர் எங்கிருந்து எங்குச் செல்கிறார் என்ற தகவல் உள்ளது.

இரவு 10 மணிக்குப் பிறகும் சில பயணிகளை பரிசோதிக்க அனுமதி உண்டா? இவர்கள் யார்?

இந்த தகவலை அவர் சரிபார்ப்பது அவரின் வேலை என்பதனால், காலையிலேயே பயணிகளின் டிக்கெட் சரிபார்க்கப்படுகிறது. ரயில்வே வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி, இரவு 10 மணிக்குப் பிறகும் ஒரு சில பயணிகளை TTE பரிசோதனை செய்ய அனுமதி உண்டு. இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் ரயிலில் ஏறும் பயணிகளை TTE வந்து அவர்களின் டிக்கெட் மற்றும் ஐடியை சரிபார்க்க உரிமை உண்டு என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல், இரவு நேர பயணத்தில் மிடில் பெர்த்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இருக்கும் விதிமுறை என்ன என்பதைப் பார்க்கலாம்.

மிடில் பெர்த் ரூல்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா?

எந்த நேரத்தில் நடுத்தர பெர்த்தில் தூங்குவதற்கு அந்த பயணிக்கு உரிமை உண்டு? இந்திய ரயில்வே தகவலின் படி, பயணத்தின் போது பெரும்பாலும் கீழ் பெர்த்தில் பயணம் செய்யும் சில பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் தூங்காமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனால், நடுப் பெர்த்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், அவர்களுக்காகக் காத்து எழுந்திருப்பது மட்டுமின்றி, அவர்களின் கருணைக்காகவும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் பயண அனுபவத்தை அசவுகரியம் ஆக்குகிறது. இதற்கும் இந்திய ரயில்வே சரியான விதிமுறை வைத்துள்ளது.

காலை 6 மணிக்கு மேல் நடுத்தர பெர்த் பயணி இதை செய்ய வேண்டுமா?

ரயில்வே விதிகளின்படி, நடுத்தர பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களின் இருக்கையைத் திறந்த பயன்படுத்தி, தூங்க அனுமதி உண்டு. இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் கீழ் பெர்த்தில் இருக்கும் பயணிகளின் கருணைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், காலை 6 மணிக்கு மேல், நடு பெர்த்தில் உள்ள பயணிகள் இருக்கையை மீண்டும் கீழிறக்கி இருக்கையில் அமர வேண்டும் என்று விதி கூறுகிறது. இதனால், காலையில் கீழே உள்ள பயணிகள், தங்கள் இருக்கையில் அமர்ந்து, வசதிக்கேற்ப பயணிக்கலாம்.

பயணிகளுக்கான இரண்டு நிறுத்த விதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இரயில்வேயில் டூ ஸ்டாப் (Two stop) என்ற இரண்டு நிறுத்த விதி உள்ளது. அதாவது, ஒரு பயணி பயணம் செய்யச் சரியான நேரத்தில் அவரது இருக்கையை அடையவில்லை என்றால், TTE உங்கள் இருக்கையை ரயிலின் அடுத்த இரண்டு நிறுத்தங்களுக்கு அல்லது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த பயணிகளுக்கும் ஒதுக்க முடியாது என்று இந்த விதி குறிப்பிடுகிறது. அதாவது, உங்கள் போர்டிங் ஸ்டேஷனில் இருந்து அடுத்த 2 ஸ்டேஷன்கள் வரை இந்த விதி செயல்படும்.

RAC பட்டியலில் உள்ளவர்களுக்கு எப்படி இருக்கைகள் வழங்கப்படும்?

முன்பதிவு செய்த பயணி தான் பதிவு செய்த ஸ்டேஷனில் ஏறவில்லை என்றாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் அந்த பயணி அவரின் இருக்கைக்கு வரவில்லை என்றால், முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையின் பயணி ரயிலைப் பிடிக்கவில்லை என்று TTE கருதி, மூன்றாவது நிறுத்தத்தைக் கடந்ததும் உங்கள் இருக்கையை இரண்டாவது நபருக்கு இட ஒதுக்கீடு செய்து இருக்கையை ஒதுக்குவார். RAC பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இந்த டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரயிலில் பயணிக்கும் பயணிகள் இந்த விதிகளைத் தெரிந்துகொண்டு பயணம் செய்வது அனைவருக்கும் சிறப்பானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக