Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

நாங்க நடத்துற ஒலிம்பிக்ஸுக்கு வரலைன்னா..! – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

 சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடரில் அமெரிக்கா பங்கேற்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என சீனா தெரிவித்துள்ளது. 

குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அடுத்த ஆண்டில் சீனாவில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலரும் பங்கேற்பது மட்டுமல்லாது உலக நாட்டு அமைச்சர்கள், அரசியல் தலைவர்களும் பார்வையாளராக இடம்பெறுவது வழக்கம். 

ஆனால் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்ஸில் அமெரிக்க வீரர்கள், வீராங்கணைகள் கலந்து கொள்வார்கள் என்றும், ஆனால் அமெரிக்க சார்பில் எந்த அதிகாரியும் பங்கேற்க மாட்டார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா விளையாட்டில் தேவையில்லாமல் அரசியலை கலப்பதாகவுன், சீனாவை சிறுமைப்படுத்தும் முயற்சி இது என்றும் விமர்சித்துள்ளது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக