Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

Fake Note Alert: உங்ககிட்ட இந்த ரூ. 500 நோட்டு இருக்கா? முக்கிய தகவலை அளித்தது அரசு!!

 Fake Note Alert: உங்ககிட்ட இந்த ரூ. 500 நோட்டு இருக்கா? முக்கிய தகவலை அளித்தது அரசு!!

500 Rupees Note: உங்களிடம் 500 நோட்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நேற்று முதல் 500 ரூபாய் நோட்டு தொடர்பான வீடியோ ஒன்று பரவி வருகிறது.

இதில் ‘உங்களிடம் இப்படிப்பட்ட 500 ரூபாய் நோட்டு இருந்தால் கவனமாக இருங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் என்ன வகையான 500 ரூபாய் நோட்டு பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இதில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் விளக்கப்படுகின்றது. அசல் நோட்டு மற்றும் கள்ள நோட்டுக்கு இடையிலான வித்தியாசம் இதில் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சரியான ரூபாய் நோட்டைக் காட்டி, அதை தேவையற்ற தர்க்கங்களின் மூலம் போலி என கூறியுள்ளார்கள். அதிக அளவில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் உண்மையை சரிபார்த்த PIB, இதன் உண்மைத் தம்மையையும் மற்ற பிற விவரங்களையும் விளக்கியுள்ளது.

PIB வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தது
 
இந்த வீடியோவைப் பற்றி PIB ட்வீட் செய்துள்ளது. அந்த ட்வீட்டில், 'ஒரு வீடியோவில்,  ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் இல்லாமல், காந்தியடிகளின் படம் அருகில் பச்சைக் கோடு இருக்கும் 500 ரூபாய் நோட்டுகளைப் பெறக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்.' என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, PIB இன் உண்மை சோதனையின்படி, இந்த செய்தி மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வைரல் ஆகி வரும் இந்த வீடியோவின் போலி செய்திகளுக்கு பொது மக்கள் இரையாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட போலிச் செய்திகள் பற்றிய உண்மையை எப்படி அறிவது

உங்களுக்கும் இந்த வகையான செய்திகள் வந்தால், அதன் உண்மைத் தன்மையை அறிய நீங்கள் ஒரு உண்மைச் சரிபார்ப்பை (Fact Check) மேற்கொள்ளலாம். நீங்கள் PIB மூலம் உண்மையைச் சரிபார்க்கலாம்.

உண்மையைக் கண்டறிய, https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று சரியான தகவலைப் பெறலாம். இது தவிர, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வீடியோவை அனுப்பி அது பற்றிய உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக