Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 டிசம்பர், 2021

அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொ

டெக்னோ போவா நியோ எனும் ஸ்மார்ட்போனை நைஜீரிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது டெக்னோ நிறுவனம். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட டெக்னோ போவா நியோ மாடல் NGN 75,100 (இந்திய மதிப்பில் ரூ.13,800) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீக் ப்ளூ, அப்சிடியன் பிளாக் மற்றும் பொவேஹி போன்ற நிறங்களில் டெக்னோ போவா நியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்பு 720×1,640 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அதேபோல் இந்த ஸமார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.அந்நிறுவனம்.

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13MP மெயின் சென்சார் மற்றும் இரண்டாம் நிலை என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் டூயல் பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டெக்னோ போவா நியோ சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ், எஃப்எம் ரேடியோ, ஒடிஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஜி-சென்சார் எனப் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த டெக்னோ போவா நியோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக