Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 டிசம்பர், 2021

DOT திடீர் அதிரடி அறிவிப்பு: உங்ககிட்ட எத்தனை சிம் உள்ளது.. இதற்கு மேல் 'சிம்' இருந்தால் இணைப்பு துண்டிப்பு..

குறிப்பிட்ட எண்ணிற்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் ஒரே ஒரு சிம் கார்டு மட்டும் பயனர் என்ற பயனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, இப்படி ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் தனது வாழ்நாளில் பயன்படுத்தும் பயனர்களைப் பார்ப்பது என்பதே மிகவும் அரிதானது. உண்மையில் நீங்கள் வெறும் ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் தான் இப்போது வரை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று தான் கூற வேண்டும். இப்படி ஒரே ஒரு சிம் கார்டை மட்டும் பயன்படுத்தும் பயனர்கள் இருக்கும் அதே இடத்தில், இன்னும் சிலர் எண்ணில் அடங்காத பல சிம் கார்டை வாங்கி பயன்படுத்தும் பயனர்களும் இந்தியாவில் உள்ளனர்.

குறிப்பிட்ட எண்ணிற்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருந்தால் அதிரடி நடவடிக்கை

இவர்களைப் போன்ற நபர்களின் எண்ணில் அடங்க சிம் கார்டு பயன்பாட்டைக் குறைப்பதற்காக இப்போது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ள குறிப்பிட்ட எண்ணிற்கு மேல் சிம் கார்டு பயன்படுத்தும் பயனர்களைக் கண்டுபிடிக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, DOT அறிவித்துள்ள குறிப்பிட்ட எண்ணிற்கு மேற்பட்ட சிம் கார்டுகளை எடுத்துச் செல்லும் பயனர்களின் அனைத்து சிம் கார்டுகளையும் மீண்டும் சரிபார்க்கத் தொலைத்தொடர்புத் துறை (DoT) கேட்டுக் கொண்டுள்ளது.

உங்கள் பெயரின் கீழ் இதுவரை எத்தனை சிம் கார்டுகளை வங்கியுள்ளீர்கள்?

அப்படி தொலைத்தொடர்புத் துறை கண்காணித்துக் கண்டுபிடிக்கும் கொடியிடப்பட்ட அனைத்து மொபைல் இணைப்புகளையும் 30 நாட்களுக்குள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைக் கட்டாயமாக இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று DoT கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது இந்தியாவில் ஒரு பயனர் எவ்வளவு சிம் கார்டுகளை பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். உங்கள் பெயரின் கீழ் உள்ள செயல்பாட்டு சிம் கார்டுக்கு இதனால் எதுவும் பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்.

சிம் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில் பல சிம் கார்டுகள் வைத்திருப்பது சகஜம். ஏறக்குறைய ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் டூயல் சிம் ஸ்லாட்டுகளுடன் தான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற பல ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் பயனர்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக பல எண்களை எடுத்துச் செல்ல நேரிடுகிறது. இருப்பினும், ஒரு நபர் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்க முடியும் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. இதை ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

மத்திய அரசின் உத்தரவின்படி ஒரு தனி நபர் எத்தனை சிம் கார்டுகளை வைத்திருக்கலாம்?

மத்திய அரசின் உத்தரவின்படி, ஒரு தனி நபர் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை அவர்களின் சரியான அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து எந்த எண்ணை அவர்களின் பெயரின் கீழ் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், இந்தியாவில் பல பயனர்கள் அவர்கள் வாங்கிய பழைய சிம் கார்டு எண்களை சரியாக இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து பல சிம் கார்டுகளை வாங்குவதனால், அவர்களின் பெயரின் கீழ் சுமார் 12க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் இருப்பதை DOT கண்டறிந்துள்ளது. இதனால் அனைத்து எண்களையும் மறு சரிபார்ப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒன்பது சிம் கார்டுக்கு மேல் இருந்தால் இனி என்ன நடக்கும் தெரியுமா?

இதன் படி கண்டறியப்பட்டு கொடியிடப்படுபவர்கள் இனி வெறும் ஒன்பது வரையிலான சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர். இதற்கு மேல் இருக்கும் அனைத்து சிம் கார்டுகளும் டெலிகாம் நிறுவனங்களால் தடை செய்யப்படும் அல்லது இடைநிறுத்தம் செய்யப்படும். இந்தியப் பயனர்கள் இப்போது தங்கள் பெயரில் ஒன்பது சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்பது அதிரடியாக்கப்பட்டுள்ளது. ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை எடுத்துச் செல்லும் பயனர்களின் அனைத்து சிம் கார்டுகளையும் மீண்டும் சரிபார்க்கத் தொலைத்தொடர்புத் துறை (DoT) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் சிம் கார்டுகளை மீண்டும் சரிபார்த்து நிறுத்தம் செய்யும் DoT

லைவ்மிண்ட் அறிக்கையின்படி, தொலைத்தொடர்புத் துறை பயனர்களுக்கு அவர்கள் விரும்பும் ஒன்பது எண்களை வைத்திருக்கவும், மீதமுள்ளவற்றை நிறுத்தவும் விருப்பத்தை வழங்குகிறது. ஜம்மு & காஷ்மீர் (ஜே&கே) மற்றும் வடகிழக்கில் வசிக்கும் மக்களுக்கு, வெறும் ஆறு சிம் கார்டுகள் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இவர்களின் சிம் கார்டு கணக்குகளும் மீண்டும் சரிபார்க்கப்படும் என்று தொலையத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

உங்கள் சிம் கார்டின் அவுட்கோயிங் மற்றும் இன்கம்மிங் எத்தனை நாட்களில் துண்டிக்கப்படும்?

கொடியிடப்பட்ட அனைத்து மொபைல் இணைப்புகளையும் 30 நாட்களுக்குள் இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை (டிஎஸ்பி) DoT கேட்டுக் கொண்டுள்ளது. கொடியிடப்பட்ட எண்களுக்கு உள்வரும் சேவையும் 45 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்படும். இந்த நடவடிக்கை இந்தியாவில் அழைப்புகளின் மோசடி நடவடிக்கைகள் குறைவதை உறுதி செய்வதற்கும்.

ஊனமுற்ற சந்தாதாரர்களுக்கு இதில் கிடைக்கும் சலுகை என்ன தெரியுமா?

எண்களின் சரிபார்ப்புக்குச் சந்தாதாரர் வரவில்லை என்றால், டிசம்பர் 7, 2021 முதல் எண்ணப்படும் 60 நாட்களுக்குள் கொடியிடப்பட்ட எண்கள் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ரோமிங்கில் இருக்கும் அல்லது உடல் ஊனமுற்ற சந்தாதாரர்களுக்கு, எண் செயலிழக்கப்படுவதற்கு முன் 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

15 நாட்களுக்குள் எண் செயலிழக்கப்படும் என்பதை மறக்கவேண்டாம் மக்களே

சம்பந்தப்பட்ட எண் சட்ட அமலாக்க முகவர் அல்லது ஏதேனும் நிதி நிறுவனத்தால் கொடியிடப்பட்டால், ஐந்து நாட்களுக்குள் வெளிச்செல்லும் வசதிகள் இடைநிறுத்தப்பட்டு, பத்து நாட்களுக்குள் உள்வரும் வசதி நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சந்தாதாரர் சரிபார்ப்புக்கு வரவில்லை என்ற பட்சத்தில் 15 நாட்களுக்குள் எண் செயலிழக்கப்படும். உங்களிடம் எத்தனை சிம் கார்டு உள்ளது, இதில் எதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக