Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

பள்ளி ஆசிரியர்கள் ஷாக்; அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!

சென்னை கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளை சேர்ந்த 174 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதன் பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார். ஒரு மெழுகுவர்த்தியை கொண்டு 100 மெழுகுவர்த்தியை ஏற்றி விடலாம். அதுபோல் ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பத்தையே படிக்க வைத்துவிடலாம்.

மேலும் பெண்களின் கல்வி மறுக்கப்படுவதால் 30 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகிறது. சமுதாயம் வெற்றிகரமாக முன்னேறுவதற்கு பெண்கள்தான் காரணம்.

தமிழகத்தில் 70% பெண்கள் எழுத்தறிவோடு நடைபோடுவதற்கு காரணம் நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என கூறியவர் தந்தை பெரியார்.


கிராம புறங்களில் பெண்களை படிக்க வைப்பதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஆசிரியர்கள் கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காக என மாணவர்கள் உணர வேண்டும்.

இதன் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பாலியல் அத்துமீறல்கள் குறித்து மாணவிகள் துணிந்து புகார் அளிக்க முன்வர வேண்டும். பள்ளிகளில் கண் பார்வைக் குறைபாடு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தான் தற்போது மருத்துவர்கள் இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக மருத்துவர்களாக எப்படி மாற்றலாம் என ஆலோசித்து வருகிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நல்ல ஆசிரியர் கூட பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளில் புகார் பலகைகள் மற்றும் வகுப்பறைகளில் 14417 மற்றும் 1098 எண் கொண்ட பதாகைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மோதலை எப்படி கையாள வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ஆசிரியர்கள், மாணவர்களை தாக்குவது தவிர்க்கப்பட வேண்டும். மிருகத்தனமாக தாக்குதல் நடத்தும் ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்


புதிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவோம்.

பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தவிர்க்க ஆசிரியர்கள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்து சேவை இயக்குவது குறித்து போக்குவரத்து துறையிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக