Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

தன் மாடு பால் கறக்கவில்லை என போலீசில் புகார் அளித்த விவசாயி..

கர்நாடகா மாநிலத்தில் தன் பசு மாடு பால் தரவில்லை என விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம், சிதில்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா, இவர் மாடுகளை வளர்த்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷனில்தன் மாடு கடந்த 4 நாட்களாக பால் கறக்கவில்லை என புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் போலீஸ் ஸ்டேஷனில் அறித்த புகாரின் படி, தான் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதாகவும், ஆனால் கடந்த 4 நாட்களாக தன் பசு மாடுகள் பால் தரவில்லை என்றும், போலீசார் பசு மாடுகளை அழைத்து பால் தரும்படி அறிவுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்திருந்தார். இதை படித்த போலீசார் அதிர்ந்து போய், இப்படியான வழக்குகளை எல்லாம் பதிவு செய்ய முடியாது என ராமையாவை திரும்பி அனுப்பினர்.

கடந்த மாதம் இதே போல ஒருவர் தன் எருமைகள் பால் கறக்கவில்லை என் போலீசில் புகார் அளித்தார். அவர் புகார் அளித்த அடுத்த 4 மணி நேரத்தில் எருமைகள் மீண்டும் பால் கறந்ததாக போலீஸ் ஸ்டேஷனிற்கு நன்றி சொல்லிவிட்டு சென்றார். அந்த செய்தி வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இப்படி ஒருவர் தன் பசு பால் கறக்கவில்லை என கிளம்பியிருக்கிறார். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக