Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 8 டிசம்பர், 2021

Suicide Pod : வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் மிஷின் கண்டுபிடிப்பு...

 sarco சுவிட்சர்லாந்தில் தற்கொலை செய்து கொள்ளும் மிஷின் ஒன்று வடிவமைக்கப்பட்டு அங்கீகாரமும் பெற்றுள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்

நொடிப்பொழுதில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எக்ஸிட் இன்டர்நேசனல் என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் இயக்குநர் டாக்டர் பிலிப் நிட்சிட்சே. இவர் "டாக்டர் டெத்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் மனிதர்கள் தற்கொலை செய்து கொல்லும் இயந்திரத்தை வடிவமைமத்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

இந்த இயந்திரம் கல்லறை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கீழே ஒரு சிறிய மிஷின் போன்ற அமைப்பு உள்ளது. அந்த மிஷினில் இந்த கல்லறை பெட்டி பொறுத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் இந்த கல்லறைக்குள் அவர்களே சென்று அமர்ந்து உள்ளே இருந்தே அந்த மிஷினை ஆன் செய்து உயிரிழக்க முடியும். வெறும் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்துவிடும். முக்கியமாக எந்த வித வலியும் இல்லாமல் உயிர் பிரியும்.

உயிர் பிரிந்தபின்பு மேலே உள்ள கல்லறை கேப்சூலை தனியாக எடுத்து இறுதி சடங்குகளை நடத்த முடியும். இந்த மிஷினை பயன்படுத்த விரும்புபவர்கள் அவர்கள் விரும்பும் இடத்திற்கு இதை கொண்டு சென்று பயன்படுத்த முடியும். சுவிட்சர்லாந்தில் கடந்த ஒராண்டில் மட்டும் 1300பேர் அங்கீகரிக்கப்பட்ட தற்கொலைகளை/ கருணைகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இந்த மிஷின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷினிற்கு சார்கோ sarco என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மிஷினை ஆன் செய்தால் அது உள்ள ஆக்ஸிஜனை கட் செய்து சில நிமிடங்களில் உயிரை வலியில்லாமல் பிரித்துவிடும். தற்போது இந்நிறுவனம் 2 மிஷின்களை 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைத்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது.

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக