Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 ஜனவரி, 2022

ஏர்டெல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை திட்டம் இதுதான்..!

  கூகுள் அதிரடி

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டிஜிட்டைசேஷன் பண்ட் ஒதுக்கியிருந்தது. இந்தத் திட்டத்தில் பெரும் பகுதி முதலீட்டை ஏற்கனவே கூகுள், முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ-வின் சக போட்டி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் கூகுள் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

கூகுள் அதிரடி

அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாக முதலீடு செய்து 1.20 சதவீத பங்குகளைப் பெற உள்ளது.

300 மில்லியன் டாலர் வர்த்தகம்

மேலும் கூகுள் நிறுவனம் 300 மில்லியண் டாலர் அளவிலான தொகையைப் பல வருட வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக அளிக்க உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்தது போலப் பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.

ஸ்மார்ட்போன், 5ஜி, கிளவுட்

தற்போது பார்தி ஏர்டெல் - கூகுள் முதலீட்டு கூட்டணி மூலம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை, இதர முக்கிய டெலிகாம் சேவைகளை வழங்க உள்ளது. இதேபோல் இந்தியாவில் கிளவுட் சேவையை மேம்படுத்துவதிலும் ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து செயல்பட உள்ளது.

71,176,839 பங்குகள்

கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ள 700 மில்லியன் டாலர் முதலீட்டுக்கு பார்தி ஏர்டெல் நிர்வாகம் 734 ரூபாய் விலையில் சுமார் 71,176,839 பங்குகளைக் கூகுள் இண்டர்நேஷ்னல் எல்எல்சி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 71,176,839 பங்குகளின் மொத்த மதிப்பு 5,234.38 கோடி ரூபாய்.

ஏர்டெல் பங்குகள்

கூகுள் முதலீடு அறிவிப்பு வெளியான உடனே பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 1.68 சதவீதம் அதிகரித்து 719.05 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 752.80 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட்டல் குடும்பம் மற்றும் சிங்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சுனில் மிட்டல் குடும்பம் மற்றும் சிங்டெல் ஆகிய இருவரும் 55.93 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் மிட்டல் குடும்பம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 24.13 சதவீத பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் டெலிகாம் நிறுவனமான சிங்டெல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 31.72 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன்

கூகுள் - ஜியோ இணைந்து சமீபத்தில் உருவாக்கிய மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனை மக்கள் மத்தியில் பெரிய அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் சுந்தர் பிச்சையின் மிக முக்கிய இலக்காக உள்ளது. இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனுக்காகக் கூகுள் சிறப்பு ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இதன் வெற்றியை தொடர்ந்து உலகில் பிற நாடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது சுந்தர் பிச்சையின் திட்டம்.

கூகுள் ஜியோ முதலீடு

சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் முதலீடு செய்வது மூலம் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவை அளித்து வர்த்தகத்தைப் பெற முடியும் எனத் திட்டமிட்டது. இதற்காக 2020ல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட், ஜியோ பிளாட்பார்மஸ் நிறுவனத்தில் 33,737 கோடி ரூபாய் முதலீடு செய்து சுமார் 7.73 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக