Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 ஜனவரி, 2022

சத்தமின்றி இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடல் அறிமுகம்.! விலை மற்று விபரங்கள்.!

 இன்டெல் கோர் ஐ3-இல் இயங்கும்

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக
இந்த லேப்டாப் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடலின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்டெல் கோர் ஐ3-இல் இயங்கும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடலின் விலை $399 (இந்திய மதிப்பில் ரூ.29,700) ஆக உள்ளது. அதேபோல் இன்டெல் கோர் ஐ5-இல் இயங்கும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடலின் விலை $549 (இந்திய மதிப்பில் ரூ.40,900) ஆக உள்ளது. மேலும் இன்டெல் கோர் ஐ7-இல் இயங்கும் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடலின் விலை $649 (இந்திய மதிப்பில் ரூ.48,300) ஆக உள்ளது.

ஜனவரி 22 முதல் எகிப்து, இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பல், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப்.ஆனால் இந்த சாதனம் சர்வதேச அளவில் கிடைப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல் தீர்மானம், 16:9 என்ற திரைவிகிதம், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல். எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த புதிய லேப்டாப் இன்டெல் கோர் ஐ3-1005ஜி1 பிராசஸர் அல்லது இன்டெல் கோர் ஐ5-1035ஜி1 அல்லதுஇன்டெல் கோர் ஐ7-1065ஜி7 மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

16ஜிபி DDR4 ரேம் மற்றும் 512ஜிபி M.2 NVMe PCIe 3.0 ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். குறிப்பாக இந்த இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் சாதனத்தில் எச்டி வெப்கேமராவும், எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது.

விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ் 2 லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 50Wh பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம். இதை சார்ஜ் செய்ய 45 வாட் சார்ஜர் ஆதரவு உள்ளது.

இந்த சாதனத்தின் ஆடியோ பற்றி பேசுகையில், டிடிஎஸ் ஆடியோ ஆதரவுடன் டூயல் ஸ்பீக்கர்கள் ஆதரவு கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் பவர் பட்டனில் கைரேகை ஸ்கேனர் ஆதரவுஉள்ளது.

இணைப்பு விருப்பங்களில் இரண்டு USB-C போர்ட்கள், இரண்டு USB 3.0 போர்ட்கள், ஒரு HDMI 1.4 போர்ட்மற்றும் ஒரு SD கார்டு ஸ்லாட் ஆகியவை அடங்கும். வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் 5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக்போன்ற ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக