Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

மத்திய அரசுக்கு ஜாக்பாட்: 35.8% பங்குகளை கொடுக்க Vi முடிவு.. Vi பங்குகள் 17% சரிவு..!

கடன் மற்றும் சேமிப்பு

இந்திய டெலிகாம் சந்தையின் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிலுவை தொகை பிரச்சனையை மொத்தமாகத் தீர்க்க வோடபோன் ஐடியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு டெலிகாம் நிறுவனங்களுக்குத் தனது AGR கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டணம் ஆகியவற்றின் நிலுவை தொகையைச் செலுத்துவதற்குப் பதிலாக நிறுவனப் பங்குகளை அளிக்க ஒரு வாய்ப்புக் கொடுத்தது.

இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட வோடபோன் ஐடியா தற்போது மத்திய அரசுக்கு தனது நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் சலுகையை ஏற்ற நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு மத்திய அரசுக்கு எவ்வளவு பங்குகளைக் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து மத்திய டெலிகாம் துறைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

17 சதவீதம் சரிவு

இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் வோடபோன் ஐடியா பங்குகள் சுமார் 17 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது, இதுமட்டும் அல்லாமல் பல வார உயர்வை இன்று காலை வர்த்தகச் சரிவில் மொத்தமாக இழந்துள்ளது.

மேலும் வோடபோன் ஐடியா நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு டெலிகாம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது 

35.8 சதவீத பங்குகள்

மத்திய டெலிகாம் துறையில் வோடபோன் ஐடியா நிர்வாகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி மத்திய அரசுக்கு 35.8 சதவீத பங்குகளை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அதன் தாய் நிறுவனங்களான வோடபோன் குரூப் 28.5 சதவீத பங்குகளும், ஆதித்யா பிர்லா குரூப் 17.8 சதவீத பங்குகளும் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் வோடபோன் ஐடியா நிர்வாகக் குழுவில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

கடன் மற்றும் சேமிப்பு

திங்கட்கிழமை நடந்த வோடபோன் ஐடியா நிர்வாகக் குழு கூட்டத்தில் தனது 58,254 கோடி ரூபாய் அளவிலான AGR கட்டண நிலுவை, 16,000 கோடி ரூபாய் வட்டி ஆகியவற்றுக்கு பதிலாக மத்திய அரசுக்கு 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட சுமார் 35.8 சதவீத பங்குகளை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவின் மூலம் அடுத்த 4 வருடத்தில் வோடபோன் ஐடியாவுக்குச் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக