எந்த நிறுவனத்தின் அல்லது வங்கியின் கிரெடிட் கார்டு பாதுகாப்பனது? யார் அதிக சலுகை வழங்குவார்கள்? யார் எவ்வளவு கேஷ்பேக் தருவார்கள்? ஆண்டுக் கட்டணம் எவ்வளவு? என்றெல்லாம் பல கேள்விகள் உங்களுக்குள் எழும். அதற்கெல்லாம் விடை
இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் என்பது தவிர்க்க முடியாத விஷயம். எல்லோரும், எல்லா சமயத்திலும் பணத்தை முடிந்து வைத்துக் கொண்டு இருப்பதில்லை. நம்மில் பலருக்கும் பணக் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மாதாந்திர ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டு ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம்.
சரி. இப்போது முதல்முறையாக நீங்கள் கிரெடிட் கார்டு வாங்க இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளும். சந்தையில் ஏராளமான கிரெடிட் கார்டு நிறுவனங்கள் காத்திருக்கும் நிலையில், எந்த நிறுவனத்தை தேர்வு செய்வது என்று உங்களுக்கு குழப்பம் ஏற்படும் அல்லவா?
எந்த நிறுவனத்தின் அல்லது வங்கியின் கிரெடிட் கார்டு பாதுகாப்பனது? யார் அதிக சலுகை வழங்குவார்கள்? யார் எவ்வளவு கேஷ்பேக் தருவார்கள்? ஆண்டுக் கட்டணம் எவ்வளவு? என்றெல்லாம் பல கேள்விகள் உங்களுக்குள் எழும். அதற்கெல்லாம் விடை இதில் காத்திருக்கிறது.
அனைத்து வகை கிரெடிட் கார்டுகளையும் அலசி ஆராய்ந்து நல்ல பலன், ரிவார்ட் பாய்ண்ட்ஸ் ஆகியவற்றை வழங்கும் 5 நிறுவனங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறது பைசா பசார் நிறுவனம்
அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி : அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு வாங்குபவர்கள், அமேசான் பிரைம் மெம்பர்களாக இருந்தால் உங்களுக்கு 5 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். நான் - பிரைம் மெம்பர் என்றாலும் விமான பயணச்சீட்டு முன்பதிவு, ரீசார்ஜ், பில் பேமெண்ட் போன்ற பரிவர்த்தனைகளில் உங்களுக்கு 2 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். இது லைப் டைம் ஃப்ரீ கார்டு ஆகும்.
ஆக்சிஸ் வங்கி ஏஸ் : ஆக்சிஸ் வங்கி ஏஸ் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, கூகுள் பே மூலமாக யுடிலிட்டி வகை பில்களை செலுத்தும்போது 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். ஸ்விக்கி, சொமேட்டோ, ஓலா போன்ற ஆப்களில் பரிவர்த்தனை செய்தால் 4 சதவீதம், பிற வகை செலவினங்களுக்கு 2 சதவீதமும் கேஷ் பேக் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், ஆக்சிஸ் உடன் இணைந்து செயல்படும் நாடு முழுவதிலும் உள்ள 4000+ ஹோட்டல்களில் உங்களுக்கு 20 சதவீதம் சலுகை கிடைக்கும். இந்த அட்டைக்கு ஆண்டுதோறும் ரூ.499 கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ கார்டு : எஸ்பிஐ சிம்ப்ளி கிளிக் கிரெடிட் கார்டு முதன் முதலில் வாங்கும்போது அமேசானில் ரூ.500 மதிப்புள்ள கிப்ட் கார்டு வழங்கப்படுகிறது. அமேசான், கிளியர் டிரிப், புக் மைசோ, லென்ஸ்கார்ட் போன்ற நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்தால் 10 எக்ஸ் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் கிடைக்கும். இதற்கு ஆண்டு கட்டணம் ரூ.499 ஆகும்.
ஃபிளிப்கார்ட் - ஆக்சிஸ் கார்டு : ஃபிளிப்கார்ட் - ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஃபிளிப்கார்ட் மற்றும் மந்த்ரா நிறுவனங்களில் பரிவர்த்தனை செய்கையில் 5 சதவீதமும், கிளியர் ட்ரிப், ஸ்விக்கி, ஊபர், பிவிஆர் போன்ற நிறுவனங்களில் 4 சதவீதமும், இதர வகை செலவினங்களில் 1.5 சதவீதமும் சலுகை கிடைக்கும். இதுதவிர கேஷ்பேக் வசதியும் உண்டு. ஆண்டு கட்டணம் ரூ.500 ஆகும்.
ஹெச்எஸ்பிசி : ஹெச்எஸ்பிசி கிரெடிட் கார்டு மூலம், வாலட் ரீசார்ஜ் தவிர்த்து, அனைத்து வகையான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு 1.5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். பிற செலவினங்களுக்கு 1 சதவீத கேஷ்பேக் உண்டு. இதற்கான ஆண்டு கட்டணம் ரூ.750 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக