Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 19 ஜனவரி, 2022

70பில்லியன் டாலர்-கேண்டி க்ரஷ், கால் ஆஃப் ட்யூட்டி கேம்களை உருவாக்கிய மாபெரும் நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

 பெரிய கேமிங் நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

கால் ஆஃப் டூட்டி மற்றும் கேண்டி க்ரஷ் போன்ற தலைப்புகளுக்கு பெயர் பெற்ற வீடியோ கேம் ஸ்டுடியோவான ஆக்டிவேஷன் பிளாஜார்ட்-ஐ வாங்கியுள்ளதாக மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. கேமிங்கிற்கு புகழ்பெற்ற ஆக்டிவேஷன் பிளாஜார்ட்டை 68.7 பில்லியன் டாலருக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. சமீப காலமாக மைக்ரோசாப்ட் பல நிறுவனங்களை கையகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த கையகப்படுத்தல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் 26 பில்லியன் டாலர்களுக்கு லிங்க்ட் இன் தளத்தை வாங்கியது.

பெரிய கேமிங் நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் இந்த நிறுவனத்தை வாங்கி இருந்தாலும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான பாபி கோடிக் மைக்ரோசாப்ட் சார்பாக அவரது பணியை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தற்போது மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் உலகின் மூன்றாவது பெரிய கேமிங் நிறுவனமாக அது உருவெடுத்து இருக்கிறது.

எக்ஸ்பாக்ஸ் பயனர்களுக்கு நற்செய்தி

இதன்மூலம் எக்ஸ்பாக்ஸ் பயனர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது என்றே கூறலாம். காரணம் எக்ஸ்பாக்ஸ் கேம்பாஸ் பயனர்கள், எக்ஸ்பாக்ஸ் மற்றும் கணினியில் ஆக்டிவேஷனின் கேம்களை இலவசமாக அணுக முடியும். வார் கராஃப்ட், டயப்ளோ, ஓவர் வாட்ச், கால் ஆஃப் ட்யூட்டி மற்றும் கேண்டி க்ரஷ் போன்ற பல உரிமையாளர்களின் கேம்கள் கேம்பாஸ் சந்தாதாரர்களுக்கு அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இதில் பல கேம்கள் இணைக்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னதாக பெஸ்தா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் 2021-ல் பெதஸ்தாவை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு பெரிய வீடியோ கேம் ஸ்டுடியோவாகும். இந்த நிறுவனம் ஃபால் அவுட், டெத்லூப் மற்றும் டூம் எடர்னல்ஸ் போன்ற தலைப்புகளுக்கு பெயர் பெற்றதாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம் பெதஸ்தாவை 7.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் தற்போது ஆக்டிவேஷன் பிளாஜார்ட்டை நிறுவனம் 68.7 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. இதில் 10 சதவீதத் தொகையிலேயே பெதஸ்தாவை நிறுவனம் வாங்கியது.

ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெற வேண்டியது அவசியம்

இதை முறையாகவும் முழுமையாகவும் செயல்படுத்து பல்வேறு நாடுகளில் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெற வேண்டியது அவசியம், இதன் காரணமாக இருவருக்கும் இடையிலான ஒப்பந்தம் 2023 நிதியாண்டில் முழுமையாக முடிவடையும் என மைக்ரோசாப்ட் உறுதி அளித்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்று

வீடியோ கேமிங் என்பது வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும், இது பில்லியன் டாலர் தொழிலாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இதுபோன்ற கையகப்படுத்தல் மூலம் நிறுவனம் தங்கள் கன்சோல்களில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பிரத்யேக கேம்களை உருவாக்க உதவும். வரும் காலங்களில் எக்ஸ்பாக்ஸ்-ல் நிறைய பிரத்யேக கேம்கள் வருவது இதுபோன்ற ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக