Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

இதுவும் சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க போகிறதா.. ரயில்வே கட்டணம் அதிகரிக்கிறதா?

சாமானியர்களை பாதிக்கும்

ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணமாக (Station Development Fee ) பயணிகளின் டிக்கெட்டில் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

 இந்த ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் ஏசி வகுப்புகளுக்கு 50 ரூபாயாக இருக்கலாம் என்றும், ஸ்லீப்பர் வகுப்பில் 25 ரூபாயும், முன்பதிவு செய்யப்படாத வகுப்புகளுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படலாம் என தெரிகின்றது.

இதனால் ரயில் பயணம் செய்யும் பயணர்களின் பயணக் கட்டணம் அதிகரிக்கலாம் என தெரிகின்றது

சாமானியர்களை பாதிக்கும்

பொதுவாக இரயில் பயணத்தினை அதிகம் தேர்தெடுப்பது சாமனியர்களே. ஏனெனில் பஸ் கட்டணம், விமான கட்டணத்துடன் ஒப்பிடும்போது, இரயில் கட்டணம் குறைவு என்பதால், பலதரப்பு மக்களும் விரும்பும் ஒரு போக்குவரத்தாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஏற்கனவே பலவற்றின் விலைவாசியும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது ரயில் கட்டணங்களும் அதிகரிக்கலாம் என்பது கூடுதல் கட்டணமாகவே பார்க்கப்படுகிறது.

யாரிடமெல்லாம் கட்டணம் வசூல்?

நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் தனியாரின் உதவியுடன் தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள், இனி வரவிருக்கும் காலத்தில் மேம்படுத்தப்படவுள்ள நிலையங்களில் ஏறுவோர், இறங்குவோருக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்படுகின்றது. எனினும் புற நகர் ரயிலில் பயணிப்போருக்கு இந்த கட்டணம் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாட்பார்ம் கட்டணம்

இந்த மேம்பாட்டுக் கட்டணம் டிக்கெட்டினை முன்பதிவு செய்யும்போதே, இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் விமான பயணிகளுக்கு வசூலிக்கப்படுவது போல, இரயில்வே பயணிகளிடமும் வசூலிக்கப்படவுள்ளது. அதேபோல ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்ற பிளாட்பார்ம்களில் பிளாட்பார்ம் கட்டணமாக 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு அமல்

மேலும் ஒரு பயணி புறப்படும் இடமும், இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் என்றால், தலா 50 ரூபாய் வீதம், 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகின்றது. எனினும் இது குறித்து அறிவிப்புகள் வரும்போது தான் முழுமையான கட்டண விகிதங்கள் தெரியவரும். ரயில்வேயின் இந்த கட்டண அதிகரிப்பு, முதல் கட்டணமாக 50 இரயில் நிலையங்களில் அமலுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக