Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 11 ஜனவரி, 2022

பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை

 


உலகிலேயே முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான பென்னட் என்பவர், இதய நோயால் பாதி்க்கப்பட்டார். ஆறு வாரங்கள் படுத்த படுக்கையாக இருந்த பென்னட், மேரிலாந்து மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டார்.

பென்னட்டின் உயிரை காப்பாற்றுவதற்கு கடைசி நம்பிக்கையாக, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஏழு மணி நேரம் நடந்த இந்த இதய மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு, கண் திறந்த பென்னட் மூன்று நாட்களாக மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி க்ரிபித் பேசுகையில் மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும் என கூறினார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக