Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 31 ஜனவரி, 2022

சென்னையில் சிறுமிகளை அடித்து துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய திரிபுரா தம்பதி கைது



சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர்  ஒருவர் கடந்த 28 ம் தேதி பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், திரிபுராவைச் சேர்ந்த தம்பதிகள் திரிப்புராவைச் சேர்ந்த 14, 15, 16, 17 ஆகிய வயது கொண்ட நான்கு சிறுமிகளை சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி சென்னை கேளம்பாக்கம் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், சிறுமிகளை மீட்டு சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நபர்களை கைது செய்யவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

நான்கு சிறுமிகளையும் சென்னை அழைத்து வந்து கேளம்பாக்கத்தில் தங்க வைத்து அவர்களை பெல்ட் மற்றும் கட்டையால் அடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதனை வீடியோ எடுத்து வைத்து தாங்கள் சொல்வதை கேட்க வில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி சிறுமிகளை மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நான்கு சிறுமிகளையும் திரிபுரா தம்பதிகள் இருவர் உட்பட நான்கு நபர்கள் பெங்களூருக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழில் ப்ரோக்கர் ஒருவரிடம் விற்பனை செய்வதற்கு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அப்போது, சிறுமிகள் குழந்தைகள் நல உதவி எண்ணுக்கு அழைத்து தகவலை கூறியதாகவும் அதன் பேரில் தங்களது குழுவுடன் சென்று குழந்தைகளை மீட்டதாகவும், பின்னர் விசாரணையில் சிறுமிகள் தங்களுக்கு நடந்த கொடூரங்களை தெரிவித்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து பூக்கடை அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிகளை நேரில் அழைத்து விசாரணை செய்தபோது திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த  தம்பதிகளான சலீமா கத்தூன்(38), அவரது கணவர் அன்வர் உசேன் ஆகியோர் சென்னையிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பியூட்டி பார்லர்களில் ரூ.13,000 சம்பளத்திற்காக சிறுமிகளின் குடும்பத்திடம் சொல்லி அவர்களை சென்னைக்கு அழைத்து வந்ததும், சென்னை கேளம்பாக்கத்தில் ஏற்கனவே தங்கியிருந்த அவர்களின் நண்பர்களான திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியைச் சேர்ந்த அலாவுதீன்(23) மற்றும் அவரது சகோதரரான மைமுதீன் ஆகியோரிடம் பாலியல் தொழிலுக்காக ஒப்படைத்ததாகவும், அவர்கள் இருவரும் 4 சிறுமிகளையும் அறையில் அடைத்து வைத்து பெல்ட் மற்றும் கட்டையால் அடித்து கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ பதிவு செய்ததும் தெரியவந்தது.

கடந்த 20 நாட்களாக சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த்தும் தெரியவந்தது. இந்த நிலையில் 4 சிறுமிகளையும் பெங்களூரில் உள்ள பாலியல் தொழில் புரோக்கர் ஒருவரிடம் விற்பனை செய்வதற்காக ரயில் மூலம் பெங்களூர் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்து. மேலும், பெங்களூர் அழைத்து செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்து அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்ததும் தெரிய வந்த்து.

இதனையடுத்து போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பூக்கடை அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிகளை திரிபுராவிலிருந்து அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய சலீமா கத்தூன் என்ற பெண் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த அலாவுதீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள அன்வர் உசேன் மற்றும் மைமுதீன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுமிகள் 4 நபர்களையும் மருத்துவ சிசிக்கையளித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு செல்போன்களை ஆய்வு செய்து வருவதுடன், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக