ஆன்லைன்
ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை
பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட
அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன்
ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம். மக்கள் ஆன்லைன் தளங்களில்
பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இதுபோன்ற ஆன்லைன்
தளங்களில் சில பொருட்கள் சலுகையுடன் கிடைப்பதால் பல ஆன்லைன் தளங்களுக்கு
நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல்
பண்டிகை காலம் என்பதால் பல்வேறு ஆன்லைன் தளங்களில் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
மதுரை பசுமலை பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் ஜெய் சிங் ராசையா. 74 வயதான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவரது மகன் வெளிநாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகன் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தந்தை மீது மிகவும் அக்கறை கொண்டவர் ஜெய்சிங் ராசையாவின் மகன். ஜெய்சிங் ராசையாவிற்கு சர்க்கரை நோய் இருப்பதால் தினசரி வீட்டிலேயே சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது வழக்கம். இதையடுத்து இவரது மகன் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அமேசான் நிறுவனத்தில் ACCU-CHEK எனும் ரத்தத்தில் சர்க்கரை அளவை காட்டும் ஸ்டிக்கை ஆர்டர் செய்து வாங்குவது வழக்கம்.
இதன் ஒருபகுதியாக வழக்கம்போல் இவரது மகன் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்தபடி அவரது தந்தைக்கு சர்க்கரை அளவை சரிபார்க்கும் ரூ.930 மதிப்புள்ள ACCU-CHEK ஸ்டிக்கை அமேசான் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஸ்டிக் குறிப்பிட்ட தேதியில் டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் சரியான பொருள் தான் டெலிவரி செய்யப்பட்டிருக்கும் என எண்ணி பிறகு பிரித்து பார்த்துக் கொள்ளலாம் என வீட்டில் வைத்துவிட்டார்.
இந்த நிலைியல் சிறிது நேரத்துக்கு பிறகு பிரித்து பார்க்கும் போது சக்கரை நோய் அளவு பரிசோதனை செய்யும் கருவிக்கு பதிலாக இரண்டு சாக்லேட் பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதை கண்டு அதிர்ந்து போன ஒய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா, தனது மகனிடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து யாரிடம் முறையிடுவது என்று தெரியாத ஜெய்சிங் ராசையா, சர்க்கரை நோயாளியான தனக்கு சாக்லெட் அனுப்பி வைத்து இருப்பது மேலும் தன்னை நோயாளியாக பார்க்கிறார்களா என நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அணில்குமார். 32 வயதான இவர் ஆன்லைனில் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை பார்த்து ஆர்டர் செய்துள்ளார். மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்த போதே ரூ.2400 பணம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட் வாட்ச் 15 ஆம் தேதி டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்தப்படி ஜனவரி 15 ஆம் டெலிவரியும் செய்யப்பட்டுள்ளது.
அணில் குமார் வாங்கிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதை அணில் குமார் ஆவலுடன் பிரித்தப் பார்த்தப்போது அதிர்ச்சி காத்திருந்தது. டெலிவரி செய்யப்பட்ட உடன் அணில்குமார் அதை ஸ்மார்ட்வாட்ச் என நினைத்து பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஆணுறை ஒன்று இருந்துள்ளது. அதனுடன் மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்திருக்கிறது. இதை பார்த்ததும் அணில் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக