Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 மார்ச், 2022

இந்த மாதிரி தத்துவத்தை எங்கேயும் கேட்டிருக்க மாட்டீங்க... சிரிக்க... சிந்திக்க

----------------------------------------------
சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்...!!
----------------------------------------------
வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால், நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம்.
கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கன்னு தெரிஞ்சிருந்தா.. என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!!
வங்கி அதிகாரி : 😅😅
----------------------------------------------
இளைஞன் : வன்முறை இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்க முடிவு பண்ணியிருக்கேன் சார்.
முதியவர் : வெரிகுட்! வெரிகுட்! அதுக்கு நான் என்ன உதவி பண்ணனும்?
இளைஞன் : உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். அவ்வளவு தான் சார்.
முதியவர் : 😧😧
----------------------------------------------
சிரிக்க சிந்திக்க..!!
----------------------------------------------
மனித உறவுகளுக்குள் இடைவெளியை அதிகப்படுத்திய இரண்டு கருவிகள் - டிவியும்📺 செல்போனும்📱 தான்....

🎓 இன்ஜினியரிங் முடிச்ச பசங்க வேலை தேடுறாங்களோ... இல்லையோ? படிக்க சொன்ன 💁 நலம் விரும்பிகளை தனிப்படை அமைத்து தேடுகிறார்கள்.

👐 உண்மையில் பார்த்தால் இன்று நான் பார்த்த 10 பிச்சைக்காரர்களில் மாற்றுதிறனாளிகள் ஒருவர் கூட இல்லை!! - அவர்கள் 💪ரோஷக்காரர்கள்..
----------------------------------------------
இது சாப்பாட்டு தத்துவம்..!!
----------------------------------------------

🍲 தோல்வி என்பது பெருங்காயம் போல.. தனியாகச் சாப்பிட்டால் கசக்கும் வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும்!

🍚 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!

🍳 லட்சியமும், முட்டையும் ஒன்று.... தவற விட்டால் உடைந்து விடும்!!

🎋 சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!

🍝 வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!

🍜 பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது, உண்மை இட்லி போல நிரந்தரமானது!!

🍙 கோபத்தை உப்பைப் போல பயன்படுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!

🍸 தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது.. அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்... நம் மீதே சிந்திவிடும்.

🍖 தாமதமான வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல.... அனுபவிக்க முடியாது!!

🍱 தன்னம்பிக்கை சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல.. சமைப்பது உங்கள் கையில்தான்!

🍛 வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது.. வெந்தபின்தான் தெரியும்....

🍪 வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது.... நட்பு என்ற சட்னி வேண்டும்..
----------------------------------------------
இது உண்மை அல்லவா?
----------------------------------------------
😇 உனக்கு துரோகம் செய்தவனைக் கண்டால் புன்னகை செய் உனது பலம் அவனுக்கு விளங்கும்..

😇 நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக