தற்போதைய அப்டேட்டில் சாதனங்களில் இருந்த பல பிழைகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆகிய இரண்டு போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பு உலகளவில் வெளியிடத் தொடங்கி இருக்கிறது. இரண்டு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆசஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் 2021-ல் ஜென்ஃபோன் 8 மற்றும் ஜென்ஃபோன் 8 பிளிப்-க்கான ஆண்ட்ராய்டு 12 நிலையான புதுப்பிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 12 அப்டேட் விவரங்கள்
ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் விவரங்கள் குறித்து பார்க்கலாம். ஆசஸ் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையின்படி, புதிய மென்பொருள் இரண்டு மாடல்களிலும் 31.0810.1226.57 என்ற எண்ணின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த புதுப்பிப்பானது ஆர்ஓஜி யூஐ வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட உள்ளமைக்கப்பட்ட பயன்பாடுகள், ஆர்மரி க்ரேட்டிவ் புதிய கன்சோல் வடிவமைப்பு மற்றும் பல மேம்பாடுகளை இந்த புதுப்பிப்புக் கொண்டு வருகிறது.
ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டில் பல அணுகல் அம்சம்
தனியுரிமை டாஷ்போர்டு, கேமரா மற்றும் மைக்ரோஃபோன் இன்டிகேட்டர்ஸ், காட்சி கிலிப்போர்டு அணுகல், தோராயமான இருப்பிட அணுகல் உள்ளிட்ட பல அணுகல் அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 அப்டேட் மூலம் வழங்குகிறது. இந்த அப்டேட்டில் பல பிழை திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் போன் 5எஸ் சாதனங்கள் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. நிறுவனம் இந்த இரண்டு சாதனங்களுக்கான அப்டேட்டை உலகளவில் வெளியிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக