தற்போது இந்தியாவில் யூபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முக்கிய நகரங்கள் முதல் துவங்கி. உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூபிஐ லைட் என்ற அம்சத்தை என்.பி.சி.ஐ (National Payments Corporation of India) அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக இந்த யூபிஐ லைட் அம்சத்தின் மூலம் சிறிய அளவிலான பணப் பரிவரித்தனைகளை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
இப்போது யூபிஐ சேவையை வழங்கும் சில நிறுவனங்களுக்கு யூபிஐ லைட் தேர்வையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த யூபிஐ லைட்டில் வாலட் தரப்படும் என்றும், பின்பு பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட்டில் பணத்தை வைத்துக்கொண்டு சிறய
அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக யூபிஐ லைட் அம்சத்தில் ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் பேமெண்ட சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக