காலை நேர உணவு அதாவது பிரேக்ஃபாஸ்ட் என்பது மிகவும் அவசியமானது. அவசரகதியில் இயங்கும் உலகில், ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் காலை உணவை சாப்பிட பலருக்கும் நேரம் இருப்பதில்லை.
ஏதோ ஒன்று சாப்பிட்டால் போதும் என்று சிலரும், நேரமின்மை காரணமாக எதுவும் வேண்டாம் என்று காலை உணவு சாப்பிடும் பழக்கம் இல்லாமல் பலரும் இருக்கிறார்கள். கோடைக்காலம் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், காலை உணவைத் தவிர்க்க முடியாது.
கோடைகாலத்துக்கு ஏற்ற உணவாகவும், குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய உணவாகவும் சில்லென்ற சுவையான ஸ்மூத்தி பவுல் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
கோடைகாலத்தில் குளிர்ச்சியான உணவுகளை அதிகம் சாப்பிட விரும்புவோம். அதுவும், ஸ்மூத்தி எனப்படும் பழங்கள், காய்கள், பால் மற்றும் நட்ஸ் ஆகியவற்றின் கலவை ஆரோக்கிய உணவாக பலராலும் விரும்பப்படுகிறது. சத்து நிறைந்த உணவாகவும், சுவையாகவும் மட்டுமின்றி, வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வையும் தரும் ஸ்மூத்தி!
ஸ்ட்ராபெரி சீசனல் பழங்களில் ஒன்று. அதிகமாக விளையும் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் சத்து நிறைந்த சுவையான பழம். ஸ்ட்ராபெரியில் வைட்டமின் சி சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. உங்களுக்கு இன்ஸ்டன்ட் ஆற்றல் அளிக்கும் பழங்களில் ஸ்ட்ராபெரியும் ஒன்று. ஸ்ட்ராபெரியின் வாசனைக்காகவே பலரும் அதை விரும்புவார்கள்.
வழக்கம் போல, ஸ்மூத்தியை திக்கான ஜூஸாகக் குடிக்காமல், இந்த ஸ்ட்ராபெரி ஸ்மூத்தியை சாலிட் உணவாக சாப்பிடலாம்.
ஐந்து நிமிடத்தில், கிரீமியான, ஃபில்லிங்கான வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய சுவையான ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி ரெசிபி. பொதுவாகவே ஸ்மூத்தியில் கிரீமியான டெக்ஸ்ச்சருக்கு வாழைப்பழம் சேர்க்கப்படும். அதே போல, இந்த ஸ்ட்ராபெரி ஸ்மூத்தியிலும் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சேர்ப்பது அழகான டெக்ஸ்ச்சரைத் தரும்.
ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்யத் தேவையான பொருட்கள்
2 பழுத்த வாழைப்பழம்
1 கப் ஸ்ட்ராபெரி
சில டீஸ்பூன்கள் கப் தேங்காய்ப்பால்
அரை டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
ஐஸ் கியூப் தேவைக்கேற்ப
அலங்கரிக்க:
சிறி சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட ஸ்ட்ராபெரி
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா (நீங்கள் விரும்பும் கோட்டைகள்)
ஊறவைத்த சூரியகாந்தி விதைகள்
செய்முறை:
மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்சி அல்லது பிளென்டரில் நன்றாக கெட்டியான (பேஸ்ட்) போன்ற கலவை வரும் வரை அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் இதை மாற்றி, உங்களுக்கு பிடித்தவாறு அலங்கரித்து சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெரிக்கு பதிலாக பப்பாளி, மாம்பழம், வெள்ளரிப்பழம் ஆகிய பழங்களிலும் மேலே கூறியுள்ள ஸ்மூத்தி செய்யலாம். அதே போல, பழங்களின் கலவை சேர்த்தும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக