Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 ஏப்ரல், 2022

150 பேரை பணி நீக்கம் செய்த மீஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..!

சாப்ட் பேங்க் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான மீஷோ, அதன் மளிகை வணிக பிரிவில் இருந்து 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான், பிளிப்கார்ட்-க்கு இணையாக மீஷோ மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ள ஒரு ஷாப்பிங் ஆப் ஆகும்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இருந்த மீஷோ இன்று, மீஷோ சூப்பர் ஸ்டோராகவும் உருவெடுத்துள்ளது.

ஏன் அதிரடி நடவடிக்கை? 

இதில் மளிகை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் ஷாப்பிங் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது. 

இந்த நிலையில் தான் மீஷோ சூப்பர் ஸ்டோர் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மீஷோவின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மத்தியில் தான், மீஷோ இப்படி ஒரு அதிரடியான பணி நீக்க நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.

உதவிகள் 

எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் நிதியுதவி பெறப்பட்ட பிறகு, மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கமும் வந்துள்ளது.

பாதிப்பு இருக்காது 

மீஷோவின் இந்த மறுசீரமைப்பு திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக, மீஷோ நிறுவனத்திற்கு வெளியே புதிய வாய்ப்புகளை பெறவும் உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது. எனினும் மீஷோவின் இந்த நடவடிக்கையானது வணிகத்தில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.

12 மாநிலங்களில் சேவை 

அதன் மளிகை வணிகத்தினை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களுக்கு சேவை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 12 மாநிலங்களிலும் சேவை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

என்ன வசதி? 

மீஷோவின் இந்த புதிய ஒருங்கிணைப்பு மூலம், மீஷோவில் உள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 36க்கும் மேற்பட்ட வகைகளில் அடங்கிய 8.7 கோடிக்கும் அதிகமான பொருட்களை இந்த ஒரே ஆப்பின் மூலம் வாங்க முடியும். 

இதுகுறித்து மீஷோ நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான விதித் ஆத்ரே, டயர் 2 நகரங்களில் உள்ள மக்களின் தேவைக்கேற்ப, இந்த ஆன்லைன் ஷாப்பிங் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்காக எங்களது பிரதான ஆப்புடன், மீஷோ சூப்பர் ஸ்டோர் ஆப்பினை இணைத்து உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக