Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

ஏசியால் கரண்ட் பில் எகிறுகிறதா? இது தெரிஞ்சா கரண்ட் பில்லை நீங்க குறைக்கலாம்.. AC பற்றிய சூப்பர் டிப்ஸ்கள்..

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலம் துவங்கியவுடன், இந்த ஆண்டின் கோடை வெப்பம் நம்மையெல்லாம் எப்படி வாட்டி எடுக்கப் போகிறதோ? என்ற எண்ணமே பலரின் மனதில் தோன்றியிருக்கும்.

கோடைக் காலம் வருவதற்கு முன்பே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் ஏர் கூலர், ஏசி, கூலர் பேன் மற்றும் டேபிள் பேன் போன்ற சாதனங்களுக்குத் தள்ளுபடியை அறிவித்து மக்களை ஈர்க்க துவங்கிவிடும். 

இதனால், மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் குளிரூட்டும் சாதனங்களை வாங்கி கொடுமையான வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்கள்.

கரண்ட் பில் உங்கள் பாக்கெட் பணத்தை சூறையாடுகிறதா?

என்னதான் புதிய குளிரூட்டும் சாதனங்களை நீங்கள் வாங்கி வெப்பத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிட்டாலும், கரண்ட் பில் என்ற அடுத்த மோசமான பிடியில் நீங்கள் சிக்கிக்கொள்வீர்கள். 

குறிப்பாக ஏசியை அதிகமாகப் பயன்படுத்துகிறீர் என்றால், நிச்சயமாக மாத இறுதியில் உங்கள் கரண்ட் பில் 270 யூனிட் முதல் 500 யூனிட்களை தாண்டி, உங்கள் பாக்கெட் பணத்தைச் சூறையாடிவிடும். 

புதிய AC வாங்கும் முன்பு சில முக்கிய விஷயங்களைக் கவனித்து ஏசி வாங்கினால், உங்களின் கரண்ட் பில் கம்மியாக வாய்ப்புள்ளது. அதேபோல், கீழே கூறியுள்ள முறையில் ஏசியை பயன்படுத்தினால் உங்கள் மின்சார கட்டணத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.

அதிகரித்துக் கொண்டே செல்லும் ஏசி பயன்பாடு

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகும் இந்த காலகட்டத்தில், வீட்டுக்குத் தேவையான குளிரூட்டும் சாதனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கோடைக்காலத்தில் மட்டும், டெல்லியில் இருக்கும் ஒரு மின் மயமாக்கப்பட்ட வீடு மாதத்திற்குச் சராசரியாக 250 முதல் 270 யூனிட் அல்லது கிலோவாட் மின்சாரம் வரை பயன்படுத்துகிறது என்று லாயிட் தலைமை நிர்வாக அதிகாரி சஷி அரோரா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான ஏர் கண்டிஷனரைத் (AC) தேர்ந்தெடுப்பது எப்படி?

மார்ச் முதல் மே வரை, இந்தியா இயல்பாகவே அதிகபட்ச வெப்பநிலையைக் காண்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் கூறியுள்ளது. இதனால், ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடும் இந்த மாதங்களில் அதிகமாகிறது. 

ஏசி வாங்கிய பின்னர் நீங்கள் மின்சாரத்தைத் திறமையாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த விரும்பினால், முதலில் உங்களுக்கான சரியான ஏர் கண்டிஷனரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். 

இதை நீங்கள் சரியாகச் செய்தாலே, உங்களுடைய மாதாந்திர மின்சார கட்டணத்திலிருந்து ஒரு கணிசமான தொகையை நீங்கள் மிச்சம் பிடிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

இன்வெர்ட்டர் ஏசி சிறந்ததா? அல்லது நார்மல் on /off ஏசி சிறந்ததா?

இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏசிகள் உங்கள் அறையின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகின்றது. அதே நேரத்தில் இவை வெளிப்புற வெப்பக் காற்றிலிருந்து அறையின் தனிமைப்படுத்தலைப் பொறுத்துக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது. 

மோட்டார் வேகம் மற்றும் கம்ப்ரெஸ் வேகத்தைத் தானாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஏர் கண்டிஷனர்களின் தேவையற்ற செயல்பாடுகளை இது அகற்றுகிறது. இதனால் மின்சாரம் மிச்சமாகிறது. 

நார்மல் on /off ஏசி உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது.

அதிக ஸ்டார் கொண்ட ஏசி மின்சார கட்டணத்தைக் குறைக்குமா?

ஏறக்குறைய ஒவ்வொரு பிராண்டட் ஏர் கண்டிஷனரும் 1 முதல் 5 நட்சத்திரங்கள் வரை ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. 

வழக்கமான ஏசிகள் அல்லது உள்நாட்டில் கூடியிருக்கும் ஏசிகளுடன் ஒப்பிடும்போது, அதிக ஸ்டார் மதிப்பீடுகளைக் கொண்ட ஏர் கண்டிஷனர்கள் தான் குறைந்த சக்தியைப் பயன்படுத்துகின்றது. 

உங்கள் ஏசியில் உள்ள ஸ்டார் எண்ணிக்கை அதிகரித்தால் உங்கள் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்பது தான் உண்மை. 

இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வரும் ஏசி வழக்கமான ஏர் கண்டிஷனரை விட 30 முதல் 35 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்களை செலக்ட் செய்யத் தயக்கம் கொள்ளாதீர்கள்

இன்வெர்ட்டர் ஏ.சிக்கள் கம்ப்ரெஸ்ஸரின் வேகத்துடன் ஒத்திருக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனால், உங்களுக்கு மின்சார செலவு குறைக்கப்படுகிறது. 

நீங்கள் வாங்கும் ஏசியின் ஆயுட் காலம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால், அதிக ஸ்டார் மதிப்பீடு பெற்ற ஏசியை வாங்குங்கள். அதேபோல், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் வெளிவரும் புதிய மாடல்களை செலக்ட் செய்ய தயக்கம் கொள்ளாதீர்கள். 

எப்போதும் நீங்கள் புதிய மாடலுடன் செல்வது, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்மை வழங்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏசியை என்ன °C வெப்பத்தில் இயக்கினால் சிறந்தது?

கம்ப்ரெஸ்ஸரின் செயல்பாடு, வெப்பநிலை பராமரிப்பு மற்றும் ஏசியின் மின்சார நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கு, நீங்கள் பெரும்பாலும் உங்களின் ஏசியின் வெப்பநிலையை 26°C முதல் 24°C செட்டிங்கில் வைத்திருப்பது மிகவும் நல்லது. 

உங்கள் ஏசியை 24°C வெப்பநிலையில் பயன்படுத்தும் போது, உங்கள் அறையில் உள்ள வெப்பம் நீக்கப்படும். ஆனால், சில் என்ற சூப்பர் கூலிங் அனுபவம் உங்களுக்குக் கிடைக்காது. 

இருப்பினும், வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் நீங்கள் ஆனந்தமாக இருக்க முடியும். குறிப்பாக இந்த வரம்பிற்குள் ஏசியை இயக்கினால் சுமார் 24 சதவீத மின்சாரம் மிச்சமாகிறது.

இந்த தவற்றைச் செய்தால் மின்சார கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும்
இந்த தவற்றைச் செய்தால் மின்சார கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும்
உங்களின் அறை அளவிற்கு ஏற்ற ஏசியை தேர்வு செய்வதும் மின்சார பயன்பாட்டைக் குறைக்க உதவுகிறது. 

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் அளவிற்கு ஏற்ற சரியான ஏசியை வாங்குவது உங்களின் மின்சார கட்டணத்தைக் குறைக்க உதவப் போகிறது. 

உதாரணத்திற்கு, வெறுமனே 150 சதுர அடி அளவு இருக்கும் ஒரு அறைக்கு 1.50 டன் திறன் கொண்ட ஏர் கண்டிஷனர் போதுமானது. ஆனால், பெரிய அறைகளில் சிறிய டன் ஏசியை பொருத்தினால், நீங்கள் அறையைக் குளிர்விக்க, உங்களின் ஏசியை நீண்ட நேரம் ஓட்ட வேண்டியதுள்ளது. இதனால், மின்சார கட்டணம் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மேல் எகிறிவிடுகிறது.

விற்பனைக்குப் பிந்தைய ஏசி சேவை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

சரியான நேரத்தில் உங்களின் ஏசியை சர்வீஸ் செய்வது என்பது முக்கியமானது. ஒரு ஏர் கண்டிஷனரில் 3000க்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன, எனவே, சரியான நேரத்தில் அவற்றை சர்வீஸ் செய்து பராமரிப்பது மிகவும் முக்கியமானது. 

இதனால், நுகர்வோர் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் பிராண்டுகளை நீங்கள் தேர்வு செய்து வாங்க வேண்டும். இயந்திரத்தின் தடையற்ற செயல்பாட்டிற்கு வழக்கமான சோதனை மிகவும் முக்கியமானது.

 ஏசியின் நீண்ட ஆயுளை அதிகரிக்க மற்றும் குளிரூட்டும் பண்புகளைத் தொடர்ந்து நிலைப்படுத்த உங்களின் ஏசியில் உள்ள ஏர் பில்டர்களை 7-15 நாட்கள் இடைவெளியில் சுத்தம் செய்வது சிறப்பானது.

கரண்ட் பில்லை குறைக்க விரைவான ஷார்ட் டிப்ஸ்

1. உங்கள் ஏசியை முடிந்த வரை 24°C - 26°C டெம்பரேச்சரில் பயன்படுத்துவது மின் கட்டணத்தைக் குறைக்க உதவும்.
2. உங்கள் அறையிலிருந்து ஏசியின் குளிரூட்டப்பட்ட கற்று வெளியேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கதவு மற்றும் ஜன்னல்கள் இறுக்கமாக மூடியிருப்பது சிறந்தது.
3. உங்கள் அறைக்குத் தேவையான கூலிங் கிடைத்தவுடன் ஏசியை OFF செய்யுங்கள்.

இதை சரியாகச் செய்து வந்தால் கரண்ட் பில் கட்டணம் குறையும்

4. ஏசி பில்டர்களை தொடர்ந்து சுத்தம் செய்யப் பழகுங்கள். ஒவ்வொரு முறையும் ஏர் பில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைகிறது. இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது.
5. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய மறக்காதீர்கள்.இதை எல்லாம் சரியாகச் செய்து வந்தால், நிச்சயம் உங்களின் கரண்ட் பில்லில் மாற்றத்தைப் பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக