Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 ஏப்ரல், 2022

இந்த பழமொழிக்கு இதுதான் விளக்கம்... வாங்க தெரிஞ்சுக்கலாம்

------------------------------------------
கடி ஜோக்ஸ்!!
------------------------------------------
சுரேஷ் : நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை? 
கனி : ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க.
சுரேஷ் : 😅😅
------------------------------------------
தங்கமணி : கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?
ரங்கமணி : அப்புறம் என்ன ஆச்சு?
தங்கமணி : வழுக்கி விழுந்துட்டாங்க! 
ரங்கமணி : 😂😂
------------------------------------------
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்..
------------------------------------------
நாம் அறிந்த விளக்கம் :
------------------------------------------
👉 கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை மேற்கொள்ளும் போது அவனையும், மாட்டையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோபித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம். இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது.

விளக்கம் :

👉 ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோஷத்தை கொடுக்கும், மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும், இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள், தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல், ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் பயக்கும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
------------------------------------------
விடுகதைகள்!!
------------------------------------------
🤔 பிடிக்கவே முடியாத கள்ளன் அவன் யார்?

🤔 தந்தைக்கு முன்னே, தரணியில் நிற்பான் அவன் யார்? 
------------------------------------------
விடை : 
------------------------------------------
💨 புகை

🐘பிள்ளையார்
------------------------------------------
வெப்பத்தை ஈர்க்கும் தோல்!!
------------------------------------------
🐻 துருவக்கரடிகள் வெள்ளை நிற ரோமத்துடன் பார்க்க அழகாக தோன்றும், ஆனால் அதன் தோல் கருப்பு நிறமுடையது. கருப்பு அதிக வெப்பத்தை உள்வாங்கும் திறன் கொண்டது. குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அவற்றுக்கு அதிகமான வெப்பத்தை இந்த கருப்புத்தோல் கிரகித்துத் தருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
------------------------------------------
டங்கு சிலிப் ஆகுதா?
------------------------------------------
😜 காலம் நல்ல காலம். நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி நாளும் போடு நல்ல தாளம்.
------------------------------------------
தகவல் களஞ்சியம்..!
------------------------------------------
🌹 பார்லி பூ மலர்ந்ததும் 2 நிமிடத்தில் வாடிவிடும்.

📬 உலகிலேயே இந்தியாவில்தான் அஞ்சல் நிலையங்கள் அதிகம் உள்ளன.

💥 உலகிலேயே அதிகமாக புதைந்து கிடக்கும் கனிமம் பாக்சைட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக