🌻 ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்னும் ஊரில் அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🌻 சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் சுமார் 95 கி.மீ தொலைவில் நாராயணவனம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🌻 மூலஸ்தானத்தில் 7 அடி உயரத்தில் வீரபத்திரர், பத்ரகாளியுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் கிரீடத்தில் சந்திரனும், கங்காதேவியும் இருக்கின்றனர்.
🌻 இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவில் திருமணத்தை நடத்தி வைப்பார் என்பதால் இவரை 'திருமண காவலர்" என அழைக்கின்றனர்.
🌻 கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை இக்கோயிலில் அமைந்துள்ளன. வீரபத்திரர் கோயில் என்றாலும், பெருமாளின் திருமணம் நடந்த தலம் என்பதால் தீர்த்தத்தை பிரசாதமாகத் தருகின்றனர்.
வேறென்ன சிறப்பு?
🌻 இங்குள்ள ஐயப்பனை 'பெரியாண்டவர்" என்று அழைக்கிறார்கள்.
🌻 ஆடியில் 'தட்ச சம்ஹார" விழா நடக்கிறது. இவ்விழாவின் 5ம் நாளில் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அதன் பின்னர், வீரபத்திரர் சன்னதி முன்பு ஒரு வாழை மரத்தைக் கட்டி அதையே தட்சனாக கருதி வெட்டுவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.
🌻 தட்ச சம்ஹாரத்திற்கு மறுநாள் வீரபத்திரரின் உக்கிரம் தணிக்க, அவரது திருவாசியில் வெற்றிலையை செருகி பூஜை செய்கின்றனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🌻 ஆடியில் தட்ச சம்ஹார விழா இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🌻 திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும், தம்பதியர் பிரச்சனை இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🌻 சுவாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக