--------------------------------------------------------
கொஞ்சம் சிரிக்கலாமே..!
--------------------------------------------------------
தொண்டன் 1 : தலைவரால சட்டசபையே அதிர்ந்திடுச்சாம்!
தொண்டன் 2 : அடேங்கப்பா... அப்படி என்ன பேசினாரு?
தொண்டன் 1 : பேசவில்லையாம்.. குறட்டை விட்டாராம்!
தொண்டன் 2 : 😜😜
--------------------------------------------------------
பாபு : இம்மாதம் இடைத்தேர்தல் வருதுன்னு எப்படி சொல்ற?
கோபு : இம்மாத ராசிபலன்-ல எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவுன்னு தெளிவா போட்டிருக்கே.
பாபு : 😂😂
--------------------------------------------------------
அறியாத தகவல்கள்...!
--------------------------------------------------------
👉 கல்கியும், ராஜாஜியும் ஒருமுறை ஒரு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது ஒருவர் கல்கியிடம், 'உங்களது புதினங்கள் அனைத்தும் வெகு நீளமாக இருக்கின்றனவே?" என்று ஆதங்கப்பட்டார். உடனே அருகில் இருந்த ராஜாஜி, 'மயிலுக்கு வால் எவ்வளவு நீளமாக இருக்கின்றதோ அவ்வளவு அழகு! கல்கியின் கதைகளும் அவ்வாறே!" என்றார்.
--------------------------------------------------------
கேள்வி :
--------------------------------------------------------
1. தென்னிந்தியாவில் வளரும் மரம் எது?
2. கம்பு வைத்திருக்கும் மாதம் எது?
3. நூறு கோடி மக்கள் இழுக்கும் ரதம் எது?
பதில் :
🌴தென்னை.
🌌மார்கழி.
🌍பாரதம்.
--------------------------------------------------------
தத்துவ வரிகள்..!
--------------------------------------------------------
💥 பல துன்பங்களையும், சின்ன சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும்...
💥 சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கப்படுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.
💥 உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே. மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு...
💥 துன்பம் வரும் போதும், இன்பம் வரும் போதும் கூடவே இருக்கும் ஒரே நண்பன் நமது உழைப்பு மட்டும் தான்.
💥 உன் மீது பிரியம் உள்ளவர்களிடம் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்... உன் மீது பிரியம் இல்லாதவர்களிடம் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்...
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக