இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து இன்ஸ்டிடியூட் ஆஃப் காம்பெடிடிவ்னெஸ் நிறுவனம் 'State of Inequality in India' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களில், மேல் தட்டில் 10 சதவிகிதம் பேர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த இந்தியர்களில் 3 சதவிகித பேர் மட்டுமே ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களில் 41.59 சதவிகிதம் பேர் மாத சம்பளத்துக்கு வேலை செய்வோராக இருப்பதாகவும், 43.99 விழுக்காட்டினர் சுய தொழில் செய்து வருவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், பெண்களைக் காட்டிலும் அதிக ஆண்கள் வருமானம் ஈட்டுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேல் தட்டில் உள்ள முதல் ஒரு விழுக்காட்டினர், ஒட்டு மொத்த இந்தியாவில் 5 முதல் 7 சதவிகித வருமானத்தை ஈட்டும் நிலையில் 15 சதவிகிதம் பேர் 5 ஆயிர ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் பெறுவதாக அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் ஒரு விழுக்காட்டினரின் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும், அடிமட்டத்தில் உள்ள 10 சதவிகித பேரின் வருமானம் குறைந்து கொண்டே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 54.9 சதவிகித குடும்பங்கள், செல்வ விகித அடிப்படையில் மிகவும் அடிமட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. 2011 முதல் 2019- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 12.3 சதவிகிதம் வரை ஏழ்மை நிலை குறைந்திருந்தாலும், 2004 - ஆண்டு முதல் 2011 வரை இருந்த வேகத்தை விட மிகவும் குறைவானது என உலக வங்கி கூறியுள்ளது.
வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்பட வேண்டும் எனவும், ஏற்றத்தாழ்வுகள் ஒரு உளவு ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றத்தாழ்வுகளை களைய, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை நகர்புற பகுதிகளில் அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அடிப்படை வருமானத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக