இந்தியாவில் பெரும்பாலான மக்கள் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் டீ வெறியர்களாகவே இருப்பார்கள். காலை, மதியம், மாலை, இரவு என மாறி மாறி டீ குடிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள் பலர். தேயிலையின் வரலாறு அதன் சுவைகள் மற்றும் வகைகள் அதை பருகும் மக்களை போலவே மிக நீளமானது மற்றும் குழப்பமானது. 1-ஆம் நூற்றாண்டிலேயே தேயிலை பற்றிய ஆவணங்கள் உள்ளன, ஆனால் 16 ஆம் நூற்றாண்டு வரை அது மேற்கத்திய உலகிற்குச் செல்லவில்லை.
இந்தியாவை பொறுத்த வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியானது டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு சக்திவாய்ந்த போட்டியாளராக மாறியபோது ஆங்கிலேயர்களுக்கு தேயிலை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. குறிப்பாக சீன தேயிலை தோட்டங்களை நம்பியிருப்பதை குறைக்க ஆங்கிலேயர்கள் தாங்களே தேயிலை உற்பத்தியை தொடங்க விரும்பினர்.
இதனை தொடர்ந்து 1823 வாக்கில், பிரிட்டிஷ் மற்றும் உள்ளூர் இந்தியர்கள் அசாம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் கருப்பு தேயிலையை (black tea) பயிரிட்டனர். தொடர்ந்து தேயிலை தோட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன. அடுத்தடுத்து தேயிலை செடிகள் பெரிய பெரிய மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டது. சுருக்கமாக சொன்னால் தேயிலை 16-ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து ஜப்பான் மற்றும் பிரிட்டனுக்குப் பயணித்தது. கடைசியாக இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்பட்டது.
டீ-யின் நன்மைகள்:
ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய தேயிலையை கொண்டு தயாரிக்கப்படும் பானமான டீ உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரைவான வழியாகும். சரியாக பயன்படுத்தினால் வெவ்வேறு வழிகளில் பயனடையலாம். ஆரோக்கியமான பலன்களை பெறுவதற்கான சில அடிப்படைகளை உள்ளடக்கியது டீ.
காலை எழுந்தவுடன் மஞ்சள் டீ குடிப்பது உடலுக்கு அழற்சி எதிர்ப்பு சக்தியை தரும். மிட் மார்னிங் எனப்படும் நண்பகலில் கிரீன் டீ குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மதிய நேரத்தில் பிளாக் டீ குடிப்பது ஆற்றல் மற்றும் கவனம் பெற உதவும். இரவில் கெமோமில் டீ குடிப்பது அமைதி மற்றும் நிதானம் பெற வழிவகுக்கும்.
சளி/காய்ச்சல் போன்ற நேரங்களில் சாய் டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொண்டை வலி இருக்கும் நேரங்களில் லெமன் & ஹனி டீ எடுத்து கொள்வது நல்ல பலனை தரும். குமட்டல் இருக்கும் போது இஞ்சி டீ, வயிறு உப்புசமாக இருக்கும் நேரத்தில் செரிமானத்திற்கு உதவும் பெப்பர்மின்ட் டீ அருந்தலாம். உயர்தர சொகுசு டீ அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்காக பல பிராண்டுகள் பிரத்யேகமான தேநீர் வகைகளை உருவாக்கி உள்ளன.
ஃபோர்ட்னம் & மேசன் (FORTNUM & MASON): லண்டன் டியூக் தெருவில் 1707-ல் ஹக் மேசன் மற்றும் வில்லியம் ஃபோர்ட்னம் ஆகியோரால் இது நிறுவப்பட்டது. இந்த ஐகானிக் பிராண்ட் அதன் அற்புதமான ஸ்பெஷல் எடிஷன் டீ-க்கள் மற்றும் உணவுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இங்கு கிடைக்கும் mellow-sweet மற்றும் golden-bright loose leaf டீ-க்கள் ராயல் டேஸ்ட் கொண்டவை.
ட்வினிங்ஸ் (TWININGS):
ட்வினிங்ஸின் English cuppa-வான ரீகல் கோல்டன் டீ மதிய தேநீர் நேரத்தை மிகவும் ஆடம்பரமான விஷயமாக மாற்றும்.
TGL Co: குட் லைஃப் நிறுவனமே TGL Co என பிரபலமாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹாட் பிவரேஜ் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இந்நிறுவனம் சமையல் நிபுணர்கள், தாவரவியலாளர்கள் மற்றும் தேயிலை மாஸ்டர்களின் மேற்பார்வையின் கீழ், ஃபிரெஷ்ஷான பழங்கள், பூக்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கொண்டு அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட கவர்ச்சியான மற்றும் சுவையான தேநீர் கலவைகளை வாடிகையாளர்களுக்கு வழங்குகிறது.
ஆக்டேவியஸ் டீ (Octavius tea):
ஆக்டேவியஸ் டீயில் ஆடம்பரத்தை வெளிப்படுத்த கூடிய அழகான டீ பாக்ஸஸ் உள்ளன. அவை அழகாகவும் சுவையாகவும் இருக்கும். இவர்கள் காஃபின் இல்லாத டீ-க்கள், மன அழுத்தத்திற்கான தேநீர், கிரீன் டீ இன்ஃப்யூஷன்ஸ், டெலிஷியஸ் பிளாக் டீ என பல பிரீமியம் வகைகள் உள்ளன.
ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக