திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் என்னும் ஊரில் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
திருச்சியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
பொதுவாக கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கும் பெருமாள், இத்திருக்கோயிலில் மேற்கு திசையை நோக்கி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் சுமார் 8 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இடது தொடையில் உட்கார வைத்து ஆலிங்கன நிலையிலும், வலது கையில் அபயஹஸ்தம் காட்டியும் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலின் தல விருட்சமானது வன்னி மரம் ஆகும்.
பிறப்பு முதல் தன்னுடைய இறுதிகாலம் வரை பல்வேறு சுக, துக்கங்களை கடந்து வரும் காலக்கட்டத்தில் ஒருவருக்கு என்னென்ன தோஷங்கள் ஏற்படும்? என்பதை பற்றி விளக்கமாக கூறும் நூல் 63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும் எனும் புத்தகம்.
முன்காலத்தில் இப்பகுதி காடாக இருந்த போது, யானைகளின் தொந்தரவை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர்.
அப்போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நரசிம்மருக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்தனர். பின், யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இங்குள்ள பெருமாள் காட்டழகிய சிங்கர் என அழைக்கப்பட்டார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதம் நரசிம்ம ஜெயந்தி, ஆனி மாதம் வருஷத் திருநட்சத்திரம், ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேகம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும்.
பிரதோஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இத்திருக்கோயிலில் பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்தியோகம் கிடைக்கும், மகப்பேறு உண்டாகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக